Saturday, July 4, 2009

கனவான்களே! உங்களிடம் சில கேள்விகள்

பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன.

தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே!
ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் ஆயிரம் ஆயிரம் கேம்விகளுக்கு என்ன பதில் தரப் போகின்றீர்கள்? அல்லது என்ன பதிலைத் தான் வைத்திருக்கிறீர்கள்?

1. சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ, அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது, அவர்களது மனநிலை பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் கூச்சலிட்ட ஐநா பிரதிநிதிகளே! யுனிசெப் கனவான்களே!

இன்றைக்கு ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருக்கிறார்களே. இதற்கெதிராக ஒரு காகிதத் தலைப்பில் கண்டனம் தெரிவிக்கக் கூட துப்பில்லாமல் போய் விட்டீர்களே? இனியும் உங்களுக்கு சிறுவர் அமைப்புகள் எதற்கு? சிறுவர் நலச் சட்டங்கள் எதற்கு?

2. ஈரான் தேர்தலிலே வாக்கு மோசடி இடம்பெற்று விட்டது என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கொடி பிடித்ததுமே ( எந்த ஆசிய நாட்டில் தான் நேர்மையாகத் தேர்தல் நடந்துள்ளது? அல்லது தேர்தல் நேர்மையானது என்று எதிர்க்கட்சிகள்; எப்போது ஒத்துக் கொண்டுள்ளன?) அந்த மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்ற ஹகவலை'யில் நித்திரையைத் தொலைத்து விட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவருக்கு ஹஆமாம்' போடும் ஏனைய அரசுத் தலைவர்களும் கண்டனம் மேல் கண்டனமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயாமாரே! உங்களுக்கு 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற செய்தி இன்னும் எட்டவில்லையா?

3. ஆபத்தான சூழலில் பணிபுரிந்த ஊடகங்களுக்கும் வைத்தியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதுகளை அள்ளிக் கொடுப்பதற்கும் வாழ்த்து மழைகளைப் பொழிவதற்கும் காத்திருக்கும் சர்வதேச நிறுவனங்களே!

குண்டு மழைகளுக்கு மத்தியிலே, செல் வீச்சுக்களுக்கு இடையிலே உயிராபத்தை எதிர் கொண்டவாறே தினம் தினம் காயப்பட்ட ஆயிரக் கணக்கான மக்களுக்கு இரவு பகல் பாராது பணியாற்றிய ஹகுற்றத்தை'ச் செய்த வைத்தியர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்களைச் சிறையிலடைக்க சிங்களப் பயங்கரவாத அரசு முயற்சி செய்கிறதே. இதற்கெதிராக மூச்சுக் கூட விட மாட்டீர்களா?

4. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க தனிக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்க அரசாங்கமே!

ஒரு உயிருக்காகக் குழு அமைக்கின்ற நீங்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 25,000 இற்கும் மேற்பட்ட எம் தமிழ் உறவுகளுக்காய் என்ன செய்யப் போகின்றீர்கள்?

5. ஈரானின் பிரித்தானியத் தூதரகத்தில் பணிபுரிந்த உள்;ளுர் வாசி ஒருவரைக் கைது செய்ததன் மூலம் பிரித்தானியாவை ஈரான் அவமதித்து விட்டது என்று கூப்பாடு போடும் பிரித்தானிய அரசே!

உங்களது வெளிநாட்டமைச்சர் உள்ளிட்டோர் கொழும்பில் வைத்து அவமானப் படுத்தப்பட்டதற்கு என்ன செய்து கிழித்து விட்டீர்கள்?

6. புலிகளே சரணடையுங்கள், புலிகளே சரணடையுங்கள் என்று தினம் தினம் அறிக்கை விட்டீர்களே. (பராக் ஒபாமா நேரடியாக வெள்ளை மாளிகை வாசலிலிருந்து இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்) உங்கம் கோரிக்கைக்கேற்ப ஐநாவிற்கும் அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியேந்திச் சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உள்ளிட்டோரை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற சிங்கள அரசின் நடவடிக்கைக்கு ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிட உங்களுக்குத் துப்பில்லாமல் போய் விட்டதா? அல்லது இந்த நடவடிக்கையை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

7.பாதுகாப்பான பிரதேசத்திற்குச் செல்லுங்கள், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்று வன்னி மக்களை கேட்டுக் கொண்ட ஐ.நா செயலாளரே!
ஏனைய கோமான்களே!

தமது விருப்பத்துக்கு மாறாகப் பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தம் நெருங்கிய உறவுகளைப் பார்ப்பதற்காக முட்கம்பி வேலி தாண்டியதற்காக அவர்களைச் சுட்டுக் கொன்று போட்டதே சிங்களப் படைகள். இது தான் நீங்கம் சொன்ன பாதுகாப்பான பிரதேசமா?

8. யுத்தக் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கரிசனையில் பெரும் சாசனங்களை எழுதிப் புத்தகங்களில் வைத்திருக்கின்ற பெரியவர்களே!

இன்றைக்குச் சரணடைந்து சிங்களப் படையின் பாதுகாப்பில் இருக்கின்ற போராளிகள் தினமும் காணாமல் போகிறார்களே! இவர்கள் விடயத்தில் யுத்தக் கைதிகள் தொடர்பான சாசனம் எதுவுமே செய்யாதா? அந்தச் சாசனமும் தனக்குப் பிடித்தமான நாடுகளில் மட்டுமே செயல்படுமா?

இறுதியாக ஒரு வார்த்தை.

சிங்கள தேசத்தின் அத்தனை மனித உரிமை மீறல்களையும் இன அழிப்பையும் மானிட விரோத செயல்களையும் கைகட்டி வாய்பொத்தி நின்று வேடிக்கை பார்க்கும் நீங்கள் ஒரு விடயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.

வருங்காலத்தில் எங்கோ ஒரு தேசத்தில் முளைக்கும் பயங்கரவாத இயக்கம் ஒன்று ( உங்கள் வரைவிலக்கணப்படியான பயங்கரவாதஇயக்கமல்ல. உண்மையிலேயே பயங்கரவாதச் செயல்களைச் செய்கின்ற பயங்கரவாத இயக்கம்) சிங்கள அரசு செய்தது போன்ற மிலேச்சத்தனமான செயலைச் செய்கின்ற போது அதைக் கண்டிப்பதற்கான அருகதை உங்களுக்கு இல்லாது போய் விடும். அப்படிக் கண்டித்தாலும் அது வலுவிழந்து போய்விடும்.(ஒரு பேப்பருக்காக எழுதப்பட்ட கட்டுரை)

Friday, February 27, 2009

தமிழுணர்வுள்ள தமிழ் இரத்தம் ஓடுகின்ற தமிழர்கள் மட்டும் வாசிக்க...

தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள்; சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதான செய்தி தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

'தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்திற்கு விருந்தாக வேண்டும். தமிழ் ஆண்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவக்க வேண்டும்' என்று மஹிந்தவின் தம்பி மமதையுடன் சொல்லித் திரிகிறான்

சிங்கள அரசின் இந்தக் கோரத் தாண்டவத்தை ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் மௌனமாய் இருந்து ஆமோதித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் இந்த மௌனத்திற்கு 'பயங்கரவாதத்தையே அழிக்கிறோம்' என்று சிங்கள அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வரும் பொய்ப் பிரச்சாரமும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் சிங்கள அரசினாலும் அவர்களது கைக்கூலிகளினாலும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எம் தமிழர்களில் சிலர் முட்டுக் கொடுத்துக் கொண்டு நிதிப் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

உதாரணமாக சிங்களவர்களின் பிரச்சார நோக்கங்களுக்காக இங்கிலாந்திலிருந்து நான்கு பத்திரிகைகளும் கனடாவிலிருந்து இரண்டு பத்திரிகைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளின் பிரதான வருமான மார்க்கமான விளம்பரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்பதை ஜீரணிப்பதற்குக் கஸ்டமாயிருந்தாலும் அதுதான் உண்மை.

இவ்வாறு விளம்பரங்களை வழங்கி எமது எதிரியின் ஊடகங்களைப் போசிப்பவர்களில் பிரபல வியாபார நிறுவனங்கள், சட்டத்தரணிகள், வீட்டு விற்பனை முகவர்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன.

அதுமட்டுமன்றி இந்தப் பத்திரிகைகளைத் தமது வியாபார நிலையங்களில் காட்சிப் படுத்தி விநியோகம் செய்வதிலும் தமிழ் நிறுவனங்களே முன்னிற்கின்றன.

தாயகத்தில் சிறுபான்மையினமாக இருந்த எங்கள் மீது சிங்களம் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதனால் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்த நாடுகளில் தாய் மண் குறித்த ஏக்கத்தோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாடுகளிலாவது எம்மை அமைதியாக வாழ சிங்கள அரசும் அவர்களது அடிவருடிகளும் அனுமதிக்கிறார்களா?

வர்த்தகத்தில் அல்லது கலைத்துறையில் அல்லது கல்வித் துறையில் பரிணமிக்கும் எம் தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தப் படாதபாடு படுகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏதாவது ஒரு கவனயீர்ப்பு ஒன்று கூடலை ஒழுங்கு செய்தால் ஏட்டிக்குப் போட்டியாக அதே இடத்தில் தாமும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை வம்புக்கு இழுக்கிறது சிங்களம்.

தமிழர் தாயகம் வல்வளைப்புச் செய்யப்பட்டதை வெற்றி விழாவாக்கி தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் பட்டாசுகளைக் கொழுத்தியும் ஆரவாரம் செய்தும் வாகனப் பேரணிகளில் சென்றும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

சிங்களத்தின் பிரச்சார ஊடகங்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வர்த்தகர்களே!

ஒரு சிறு தொகையினராக இருக்கும் இவர்களைக் கவர்வதற்காக, உங்களது சொற்ப வர்த்தக நலன்களுக்காக 5 இலட்சத்திற்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மன உணர்வை, ஆதங்கத்தை, உள்ளக் குமுறல்களை எல்லாம் புறந்தள்ளிச் செயற்படப் போகிறீர்களா?

ஒரு சிறு தொகையினரான மக்களைக் கவர்வதற்காக எம்மினத்தையே காட்டிக் கொடுக்கும் இந்தப் பாதக செயலைத் தொடர்ந்து செய்யப் போகிறீர்களா?

பெரும்பான்மையான தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதிரியின் பிரச்சார ஊடகங்களுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள்.

அறிந்தோ அறியாமலோ சிங்கள ஊடகங்களைப் போசித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தம் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். ஆனால் இனியும் முட்டுக் கொடுப்போம் என்று முரண்டு பிடிக்கும் வணிக நிலையங்களுடன் எமது தொடர்பைத் தொடர்ந்து பேணப் போகிறோமா?

ஆயிரம் அவலங்களைச் சுமந்து கொண்டு வாழ்வா சாவா என்று எம் சகோதரர்கள் துடித்துக் கொண்டிருக்க அற்ப வியாபார நோக்கத்திற்காக எதிரியிடமே மண்டியிடும் இவர்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்கத் தயாராவோம்

தாயகத்தில் அவலப்படும் எம்முறவுகளுக்காக என்ன செய்வது என்ற ஏக்கத்தோடும் எம் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றனவே என்ற ஆதங்கத்தோடும் இருக்கும் உறவுகளே.

அற்ப சலுகைகளுக்காக எம்மிடையே இருக்கின்ற இந்த எட்டப்பர்களை இனங் கண்டு ஒதுக்கி வைப்பதும் எமது உறவுகளுக்காக செய்கின்ற பணிகளில் ஒன்று தான் என்பதை நினைவில் கொள்வோம்.

உணவின்றி மருந்தின்றி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு எம்முறவுகள் காத்திருக்க அந்த மரண அரக்கனுக்கே விருந்தோம்பல் செய்யும் பச்சோந்தித்தனத்தை துடைத்தெறிவது புலம் பெயர் தமிழர் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஒன்றுபட்ட தமிழர் பலத்தின் முன்னால் எட்டப்பர்களும் அடிவருடிகளும் தொலைந்து போகட்டும்.

Monday, February 23, 2009

Women don’t like to get marry. WHY

A New Survey says that 65% of the women don’t like to get marry. WHY????

1. Men are like Weather . Nothing can be done to change them.
2. Men are like Blenders You need One, but you're not quite sure why.
3. Men are like Chocolate Bars .. Sweet, smooth, & they usually head right for your hips.
4. Men are like Commercials ..... You can't believe a word they say.
5. Men are like Department Stores ... Their clothes are always 1/2 off!
6. Men are like .. Government Bonds .... They take soooooooo long to mature.
7. Men are like .. Mascara . They usually run at the first sign of emotion.
8. Men are like Popcorn .... They satisfy you, but only for a little while.
9. Men are like Snowstorms ... You never know when they're coming, how many inches you'll get or how long it will last.
10. Men are like Lava Lamps . Fun to look at, but not very bright.
11. Men are like Parking Spots All the good ones are taken, the rest are handicapped.
12. Men are like Laxatives ... They irritate the crap out of you.

Sunday, February 22, 2009

புஷ்ஷிற்கு இது தேவையா

புஷ்ஷிற்கு படிச்சவங்க பெரியவங்க மட்டும் தானா எதிரி
இந்தப் படத்தைக் கொஞ்சம் பாருங்க.....


Saturday, February 21, 2009

வரும்... ஆனா வராது....

மீள் வருமா

புல்லுத் தரையில் விளையாடிப்
புண்ணாய்ப் போன கால்களுக்குப்
புளுதி தனையே மருந்தாக்கிப்
புரண்ட மகிழ்ச்சி மீள்வருமா

காலை உணவும் இல்லாமல்
காலிற் செருப்பும் இல்லாமல்
காச்சும் வெயிலில் விளையாடிக்
களித்த நாட்கள் மீள்வருமா

தோட்டம் துரவில் அலைந்தலைந்து
தொட்டாற் சுருங்கி மரம்தேடி
தொட்டுத் தொட்டு இலைசுருட்டி
தொலைத்த நாட்கள் மீள்வருமா

முறமது குடையாய் மாறிவிட
முற்றம் நிறைந்த மழைநீரில்
காகிதக் கப்பல் விட்டேநாம்
களித்த நாட்கள் மீள்வருமா

வீட்டுப் பாடம் செய்யாமல்
விளையாடிப் பின் காலையிலே
வியாதி எனவே பலசொல்லி
வீட்டில் நின்ற நாள்வருமா

காதல் என்ற சொல்லுக்குக்
கருத்தே தெரியா வயதினிலே
கடிதம் கொடுத்துப் பதிலுக்காய்
காத்த நாட்கள் மீள்வருமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியுடன்
கலகல வென்று சிரிக்கின்ற
கன்னிப் பெண்கள் பின்னாலே
காவல் சென்ற நாள்வருமா

கள்ள மில்லா மனங்கொண்ட
கனிவும் பண்பும் மிகக்கொண்ட
நண்ப ரோடு சேர்ந்திருந்த
நல்ல நாட்கள் மீள்வருமா

வெய்யில் மிகுந்த நேரத்தில்
வேப்ப மரத்து நிழல்தன்னில்
சாய்வுக் கதிரை துணையுடனே
சயனித்த நாட்கள் மீள்வருமா

தொல்லை இல்லா நண்பருடன்
தொடராய் ஓடும் வண்டியிலே
தொங்கிக் கொண்டே பயணித்துத்
தொலைத்த நாட்கள் மீள்வருமா

அறியாமல் நான் செய்துவிட்ட
அத்தனை தவறும் களைந்தகற்றி
அழகாய் மீள வாழ்க்கையினை
அமைத்து வாழும் நாள்வருமா

Thursday, February 19, 2009

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்
அறிவுடனே நான்வாழ
அனுதினமும் கனவுகண்ட
அன்பான அம்மாக்கு

என்னருகே இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
அருமையினை உணர்கையிலே
அருகினிலே நீயில்லை

மெழுகாய் உனைஉருக்கி
மெருகூட்டி நின்றவளே
வெளிச்சத்தின் அருமையினை
இருட்டில்தான் உணர்கின்றேன்

உன்பேனா பிரசவித்த
உரைகளைநான் மேடையேற்றி
பேச்சாளன் ஆகியதை
பெருமையுடன் நினைக்கின்றேன்

பரீட்சைக்கு முதல்நாளும்
படுக்கையிலே விழுந்திடுவேன்
என்னருகே வந்திருந்து
எனக்காக நீபடித்தாய்

என்பாடம் தனைப்படித்து
எனைஉயர்த்த முயன்றவளே
உன்பாசம்தனை எந்த
உலகத்தில் காண்பேனோ

சிந்தையிலே எந்நாளும்
எந்தனையே தாங்கியதால்
உந்தனுக்கு எப்போதும்
நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ
என்னிடத்தில் கேட்டதில்லை
எனக்காக எதையும்நீ
செய்யாமல் விட்டதில்லை

சேவைசெய்தோம் என்கின்ற
செருக்கொடு இருப்போரே
சேயெனக்குத் தாய்செய்த
செயலுக்கு இணைவருமோ

கடைமையினைச் செய்துவிட்ட
களிப்போடு சென்றுவிட்டாய்
கைம்மாறு செய்யாமல்
கலங்குகின்றேன் தனியாக

கடனாளி இல்லாமல்
கடைசிவரை வாழுமெந்தன்
கனவினைநீ கலைத்துவிட்டு
கண்மூடிப் போனாயே


உன்னிடத்தில் பட்டகடன்
அடைப்பதற்கு வழியின்றி
அரைவழியில் விட்டுவிட்டு
அவ்வுலகம் போனாயே

வியர்வையினை நீராக்கி
விளைவித்த பயிரெங்கள்
விளைச்சலினைக் காணாமல்
விட்டுவிட்டுப் போனாயே

அடுத்துஒரு பிறப்பிருந்தால்
அம்மாஉன் பிள்ளையாகப்
பிறக்கின்ற வரமெனக்குப்
பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு
மகனாக வரவேண்டும்
நான்செய்த தவறெல்லாம்
நீசெய்ய அழவேண்டும்

எமனுன்னைப் பிரித்தெடுத்து
எங்கேதான் வைத்தாலும்
என்மீது ஒருகண்ணை
எப்போதும் வைத்திருப்பாய்

உதிரத்தை எரித்துநீயும்
உழைத்திட்ட உழைப்பெந்தன்
உள்ளத்தில் இருக்கும்வரை
உன்நினைவோ டிருந்திடுவேன்

Monday, February 16, 2009

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்


இந்த ஆன்டி கோபம் வந்தால் ஜுாக்கெட்டுக்கு சேதாரம் இல்லாமல் எப்படி அரிவாளை எடுப்பார்? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க பிளீளீளீஸ்

இந்த நாய்க்கு இருக்கிற அறிவாவது நமக்கு இருக்கா????


Sunday, February 15, 2009

காதல் பாடம்

வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது.

தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிருந்தது.

'தம்பி கொஞ்சம் இப்பிடி இரு ராசா. புறோக்கர் கந்தசாமி உனக்கு ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறார். நல்ல வசதியான இடம், பிள்ளை கனடா சிற்றிசன் உள்ளதாம். உனக்கு விருப்பமெண்டா அங்கபோய் உன்ர படிப்பை தொடர வழி செய்து தருவினம். இங்கையும் நிறையக் காணி பூமி எல்லாம் இருக்குது. புறோக்கர் நாளைக்குப் பின்னேரம் வாறன் எண்டு சொன்னவர். அதுக்குள்ளை உன்ரை முடிவைச் சொன்னியெண்டால் பேச்சைத் தொடரலாம்.'

பெண்ணினுடைய படத்தை அவனிடம் கொடுத்து அந்தப் பேச்சை சுருக்கமாகவே முடித்திருந்தார். சாந்தினியுடனான இந்த மூன்று வருடக் காதல் இல்லாமல் இருந்திருந்தால் அவனுக்கு அங்கு யோசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. ஆனால் சாந்தினி??

மூன்று வருடங்களுக்கு முன்னர் அவளை வகுப்பில் சந்தித்த அந்த நாட்களை இரை மீட்டிப் பார்க்கிறாள்.ஆரவாரமின்றி வகுப்புக்கு வந்து தானுண்டு தன் கற்றலுண்டு என்றிருக்கும் அவளின் அடக்கமும் பாடங்களில் காட்டும் தீவிர ஆர்வமும் தன்னிடம் ஒரு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியதை றஜீவனால் உணர முடிந்தது.

கணித பாடத்தில் அவனுக்கிருந்த அசாத்தியத் திறமை காரணமாக தனக்கு ஏற்படும் சந்தேகங்களை சாந்தினி அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்வாள். படிப்படியாக அவர்களுடைய அளவளாவல் பாடவிடயங்களுக்கு அப்பால், சினிமா, அரசியல், விளையாட்டு என்று வியாபித்துச் செல்லத் தொடங்கியது. இவற்றில் இருவருக்குமே இருந்த ஒத்த ரசனைத் தன்மை படிப்படியாக இவர்களுடைய நட்பை காதலாக மாற்றியது.

இவ்வாறாக மலர்ந்த காதல் இந்த மூன்று வருட காலத்தில் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் தந்தையாரின் பேச்சு றஜீவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது.சாந்தினி தன்னை தன் உயிரினும் மேலாக நேசிக்கின்றாள் என்பதை றஜீவன் நன்கறிவான். ஆனால் அவளுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதிலிருந்து அவளது குடும்பம் வறுமையில் வாடியது.தாயாரின் கடும் உழைப்பினால் தான் நான்கு பெண் பிள்ளைகளும் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் தன் உழைப்பிலேயே குடும்பத்தை நடாத்த வேண்டும் என்பதை றஜீவன் உணர்ந்திருந்தான். இது இயல்பாகவே சற்று ஆடம்பரப்பிரியனான றஜீவனின் மனதில் சிறு நெருடலை ஏற்படுத்தியிருந்ததும் உண்மையே.இந்த நிலையில் மீண்டும் மீண்டும் தந்தையின் வார்த்தைகளைச் சிந்தித்த அவனது மனம் பணத்தின் முன் காதலைத் தியாகம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஏழெட்டு வருடங்களாகக் காதலித்தவர்கள் கூட தங்கடை நல்வாழ்விற்காக இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள் தானே என்று தன்னுடைய முடிவுக்கு நியாயமும் கற்பித்துக் கொண்டான். தங்களுடைய சுயநலமான முடிவுகளை நியாயங்களாக நினைத்துக் கொள்வதில் யாருக்கும் தடையில்லையே.

இந்த முடிவை இன்று எப்படியாவது சாந்தினியிடம் கூறிவிட வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்தாலும் அதனை அவளிடம் நேரடியாகக் கூற முடியாது குற்றமுள்ள மனது குறுகுறுத்தது. இறுதியில் தன்னுடைய முடிவைக் கடிதமாக எழுதிக் கொண்டு சாந்தினியைச் சந்திப்பதற்காக சைக்கிளில் புறப்பட்டான். மனத்திலிருந்த குற்றஉணர்வு அவனுடைய சைக்கிளின் வேகத்தை வெகுவாகக் குறைத்திருந்தது.

றஜீவன் சென்று கொண்டிருந்த பாதையில் சிறிது தூரத்தில் சிறு கூட்டமொன்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே நடப்பதை அறிய விரும்பியவனாக சைக்கிளை நிறுத்தி விட்டு மெதுவாக எட்டிப் பார்க்கிறான்.புறா ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துபோய்க் கிடக்கிறது. அருகே இருந்த அதன் ஜோடி தன் அலகுகளால் இறந்த புறாவின் இறக்கைளைக் கொத்திக் கொத்தி அவலக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் சோகம் அப்பியிருந்தது. நீண்ட நேரமாக இவ்வாறு அலறிக் கொண்டிருந்த காரணத்தால் அது மிகவும் இளைத்திருந்தது.

'காலையிலிருந்து இது இப்படித்தான் தீன் ஊண் இல்லாமல் கத்திக் கொண்டிருக்குது.'

என்று வேடிக்கையாளர்களில் ஒருவர் சொல்ல அருகே நின்ற வயதான ஒருவர்

'இந்த ஐந்தறிவு ஜீவன்களிடம் இருந்து நாங்கள் படிக்க வேண்டியது எவ்வளவோ
இருக்குது என்று பெருமூச்சுடன் சொன்னார்.

நடந்த சம்பவமும் பெரியவரின் வார்த்தைகளும் தனக்குச் சாட்டையால் அடிப்பதைப் போல றஜீவன் உணர்ந்தான்.தன்னுடைய துணையின் இழப்பைத் தாங்காது உணர்வின்றி உடல் சோர்ந்து கதறியழும் இந்த ஐந்தறிவு ஜீவனையும் உண்மையான காதலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது காதலிப்பது கட்டாயக் கடமை போலவும் காதலிக்காமை தரக்குறைவான விடயமாகவும் கருதி அதற்காகவே யாரையாவது காதலித்து பின்னர் வீட்டிலேற்படும் எதிர்ப்புகள் காரணமாகவோ அல்லது புரிந்துணர்வின்மை காரணமாகவோ அந்தக் காதலை சர்வ சாதாரணமாகவே முறித்து சிறிது காலத்திலேயே மற்றுமொரு பந்தத்தை ஏற்படுத்தி காதல் என்ற வார்த்தையையே கொச்சைப்படுத்தும் இந்த மானுட சமுதாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

அதிலும் தன்னை மானசீகமாக மூன்று ஆண்டுகளாக நேசித்தஇ நேசித்துக் கொண்டிருக்கிற ஒரு அப்பாவிப் பெண்ணை பணம் பகட்டுக்காக சில நிமிடங்களிலேயே மறக்கத் துணிந்துவிட்ட தன்னையும் அந்தப் புறாவையும் ஒப்பிட்ட போது அந்த ஐந்தறிவு ஜீவனை விடத் தான் எவ்வளவோ குறுகிவிட்டதை அவனால் உணரமுடிந்தது.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக சட்டைப் பையிலிருந்த கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து விட்டு சைக்கிளைத் திருப்பிக் கொண்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தயாராகிறான். தந்தையிடம் சொல்லவேண்டிய முடிவைப் பற்றி இப்பொழுது அவனிடம் ஒரு தெளிவு இருந்தது.

உலகத் தமிழர்களே ஒரு நிமிடம்!

இயன்றதைச் செய்வோம். இன்றே செய்வோம்

உலகத் தமிழர்களது வரலாற்றில் மிகவும் கடினமான, துயரங்கம் சோய்ந்த, இரத்தத்தில் நனைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஈழத்திலே அப்பாவித் தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ஆட்டிலெறித் தாக்குதல்களிலும் வான் குண்டுத் தாக்குதல்களிலும் தினமும் பலர் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்படுகிறார்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய வைத்தியசாலைகளைக் கூட 'இராணுவ இலக்கு' என்று சொல்லித் தாக்கும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது.

யுத்த தர்மம், மனித தர்மம் என்ற எதனையும் அறிந்திராத, எதனையும் மதிக்காத ஒரு கொடூரமான ஆட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அராஜகங்களையும் கொடூரங்களையும் கண்டு உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கம் அனைவரும் (ஒட்டுக்குழுக்களையும் அரச கதிரைக்காக வேட்டியையும் இழக்கத் துணிந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும் தவிர) கொதித்துப் போயிருக்கிறார்கள்.

தமது உறவுகளை அவலச் சாவிலிருந்து காக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் விளைவாக புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டப் பேரணிகம், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள்;, உண்ணாவிரதப் போராட்டங்கள் எனப் பலவகையான போராட்டங்கம் நடத்தப்பட்டு வருகின்றன.பெரும் எண்ணிக்கையான தமிழர்கள்; வயது வித்தியாசமின்றி ஒன்று திரண்டு சிங்களத்தின் இன அழிப்புக்கு எதிரான கோசங்களையும் அந்த இன அழிப்பைக் கண்டும் காணாமலும் இருக்கும் சர்வதேச நாடுகளைக் கண்திறக்கக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

ஆனாலும் கடந்த சில தினங்களாக இது தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்களின் எண்ணிக்கையிலும் அதில் கலந்து கொள்பவர்களின் தொகையிலும் இந்தப் போராட்டங்களுக்கு ஊடகங்கம் வழங்கும் பிரச்சாரத்தின் அளவிலும் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.தமது போராட்டங்களின் பின்பும் கண் திறக்க வேண்டியவர்களின் கண்கள் மூடப்பட்டே இருக்கின்றதே என்ற ஆதங்கமும் தமது போராட்டங்களும் உழைப்பும் விழலுக்கிறைத்த நீராகி விட்டனவே என்ற வெறுப்பும் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்ற அவநம்பிக்கையுமே இதற்கான காரணம் என்று தெரிகின்றது.


நாங்கம் கையாலாகாதவர்களாகி விட்டோமே, எங்கம் மக்களைக் காக்க எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுபவர்களே! உங்களுக்காக ஒரு குட்டிக் கதைஒரு காடு தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீ எங்கும் பரவி பெரும் நாசத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தருணத்தில் அங்கு வாழ்ந்து வந்த மிருகங்கம் மற்றும் உயிரினங்கள்; அனைத்தும் அந்தக் காட்டிலிருந்து அவசரமாக வெளியே வந்தன. ஓடி வந்த மிருகங்கம் அனைத்தும் காட்டிற்கு வெளியில் நின்று கொண்டன. தீயை அணைக்கும் முயற்சியையோ தாம் வாழ்ந்த காட்டை காப்பாற்றும் எண்ணத்தையோ அவை கொண்டிருக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அங்கு ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுப்படுத்துவது என்பது தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணமேயாகும்.

ஆனால் அங்கிருந்த பாடும் பறவையொன்று (Humming Bird) மட்டும் உடனடியாகச் செயற்பட ஆரம்பித்தது. அது அருகிலிருந்து குளம் ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து தன்னால் எடுத்து வர முடிந்த ஒரு துளி நீரை உதடுகளால் எடுத்து வந்து கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த அந்தக் காட்டுத் தீயின் மீது ஊற்றியது. தனது முயற்சியில் சற்றும் தளராது அந்த Humming Bird தொடர்ந்து குளத்திற்கும் காட்டுக்குமாகப் பறந்து பறந்து நீரினை விசிறிக் கொண்டிருந்தது.

இந்தப் பாடும் பறவையின் செயலை அங்கு கூடியிருந்த மற்றைய உயிரினங்கம் ஏளனம் செய்தன. அதனுடைய முயற்சியை விழலுக்கிறைத்த நீர் எனக் கூறி எள்ளி நகையாடின. யானை, சிங்கம், புலி உள்;ளிட்ட இந்தப் பெரிய மிருகங்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாது அந்தச் சிறிய பறவை தன்னுடைய நடவடிக்கையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது.

பலம் வாய்ந்த தம்மைப் போன்ற மிருகங்களே எதுவும் செய்ய முடியாது என உணர்ந்து மௌனித்து இருக்கும் போது இந்தச் சிறிய பறவையால் எதனைச் சாதித்து விட முடியும் எனத் தொடர்ந்து ஏளனம் செய்த அந்த மிருகங்கம் அந்தச் சிறிய பறவையை வழி மறித்து ஏய் சின்னப் பறவையே! என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய். கொழுந்து விட்டெரியும் இந்தப் பெரிய தீயைக் கண்டு பலம் வாய்ந்த நாங்களே சும்மா பயந்து போய் இருக்கும் போது நீ மட்டும் பெரிதாக எதனைச் சாதித்து விடப் போகிறாய். பேசாமல் எங்களுடன் இருந்து விடு என்று கூறின.அதற்கு தொடர்ந்து தன் கடமையைச் செய்தவாறு அந்தப் பாடும் பறவை பின்வருமாறு பதில் சொன்னது.

நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். (I am doing the best I can )

பலம் வாய்நத மிருகங்கம் பல எதுவும் செய்யாமல் வாழாவிருந்த போதும் தன்னால் சாதிக்கக் கூடியது மிகச் சிறிய அளவே என்று தெரிந்து கொண்டும் தன்னால் ஆனதை உடனடியாகச் செய்யத் தொடங்கிய அந்த Humming Bird ஐப் போலவே உலகிலுள்ள வாழும் தமிழர்கள் அனைவரும் எம்மால் இயன்ற அனைத்தையும் எமது முழு வளங்களையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும்.

இதன் மூலமே மரணத்தின் வாசலில் நிற்கும் எம் தமிழ் உறவுகளை அந்தக் கொடூரர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் தாயகத்தில் ஒரு தமிழனின் உயிர் அநியாயமாகக் காவு கொள்ளப்படுகிறது என்பதை நினைவில் கொள்வோம்

Monday, February 9, 2009

பெண்களே இது நியாயமா?

சீரழிவாய்ப் போய்விட்ட
சீதனம் செய்துவிட்ட
சிறுமையினைப் பாரென்று
சினந்திருக்கும் பெண்களுக்கு

சந்தோச வாழ்க்கைக்கு
சாபமாய்ப் போய்விட்ட
சவக்கிடங்கைப் பாரென்று
சலித்திருக்கும் பெண்களுக்கு

அடுக்காத செயலாலே
அழிந்தவர்கள் பெண்களென்று
ஆண்மகரைத் திட்டிநிற்கும்
அன்பான பெண்களுக்கு

தமிழரிடை பரவிவிட்ட
தறிகெட்ட வழக்கத்தால்
இனிமையான வாழ்க்கையினை
இழந்தவர்கள் நாங்களும்தான்

அநியாயச் சடங்காலே
ஆடவர்க்கு அழிவேது
அலட்சியமாய்க் கேட்போர்க்கு
அடியேன்நல் உதாரணமாம்

சீர்கெட்ட சீதனத்தால்
சிதைந்தவர்பெண் மட்டுமென்ற
சிந்தனையை உம்மிடத்தில்
சிதைத்துவிடும் எந்தன்கதை

தறிகெட்ட வழக்கத்தால்
தகர்ந்தவர்பெண் மட்டுமென்ற
தர்க்கத்தைத் தவிர்ப்பதற்காய்
தருகின்றேன் என்கதையை

இளமைப் பருவத்தின்
இனிய கனவுகளை
இதயத்தில் சுமந்தவனாய்
இசைபாடித் திரிந்தவன்நான்

எதிர்கால வாழ்வுபற்றி
எத்தனையோ எண்ணங்கள்
என்னவளைப் பற்றித்தான்
ஏராளம் கற்பனைகள்

பணக்காரி தேவையில்லை
பகட்டுகளும் தேவையில்லை
பல்கலை சென்றுபெற்ற
பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்து
பணிந்திடவும் தேவையில்லை
எஜமானாய்ப் பாவித்து
எனக்குழைக்கத் தேவையில்லை

தலைவன்நீ என்றுசொல்லி
தவறிழைக்கும் போதெல்லாம்
தஞ்சாவூர் பொம்மையாகத்
தலையாட்டத் தேவையில்லை

தவறொன்று செய்துவிட்டால்
தட்டிக் கேட்கவெண்டும்
பிழையொன்று செய்துவிட்டால்
பிழையென்று சொல்லவெண்டும்

இன்பமோ துன்பமோ
இணையாகப் பகிர்ந்துகொள்ள
உற்றதுணை ஒன்றைத்தான்
உண்மையிலே தேடிநின்றேன்

என்துணையாய் வரப்போகும்
என்னவளைப் பற்றியெந்தன்
அடிமனதில் பதிந்திட்ட
ஆயிரமாம் கற்பனைகள்

தமிழர் குடும்பத்தில்
தலைமகனாய்ப் பிறந்ததனால்
ஆசைக் கனவெல்லாம்
ஆகாயக் கோட்டையாச்சு

கல்யாணச் சந்தையிலே
கழுத்தை மெல்லநீட்டுதற்காய்
அடுக்கடுக்காய் காத்திருந்த
அன்பான சோதரிகள்

அவர்தம் வாழ்க்கையினை
அழகாக அமைப்பதற்காய்
அடிமனதில் பதிந்திருந்த
ஆசைகளை எரித்துவிட்டேன்

சகோதர வாழ்க்கைக்காய்
சகலதையும் மறந்தேநான்
எட்டாத கொப்பொன்றை
எட்டிப் பிடித்துவிட்டேன்

வந்தவளைப் பற்றியும்நான்
வரைந்திடுவேன் நான்குவரி
வரைந்து முடிப்பதற்குள்
வந்துவிட்டால் பெருஞ்சமர்தான்

பலலட்சம் சொத்துள்ள
பணக்காரி என்மனைவி
வளமான குடும்பத்தின்
வாரீசாம் என்மனைவி

பணத்திற்கு மட்டுமல்ல
பகட்டிற்கும் குறைவில்லை
செல்வத்தில் மட்டமல்ல
செருக்கிற்கும் குறைவில்லை

அணிகலனில் மட்டுமல்ல
ஆணவத்தில் குறைவில்லை
தங்கத்தில் மட்டுமல்ல
தலைக்கனத்தில் குறைவில்லை

பணம்கொடுத்து வாங்கியதால்
பரிகாசம் செய்கின்றாள்
விலைகொடுத்து வாங்கியதால்
வீணனாகப் பார்க்கின்றாள்

கணவனென்னை மதிக்கவில்லை
கர்வத்தால் மிதிக்கின்றாள்
புருசனென்று பார்க்கவில்லை
புல்லென்று தூற்றுகின்றாள்

கைநீட்டி வாங்கியதால்
கைகட்டி நிற்கின்றேன்
பலலட்சம் வாங்கியதால்
பதிலின்றி நிற்கின்றேன்

விலைபோன காரணத்தால்
விதியைநொந்து நிற்கின்றேன்
தீனி போடமட்டும்
திறக்கின்றேன் என்வாயை

என்கதையைக் கேட்டதுமே
எதற்காக அழுகின்றீர்
என்னைப்போல் வாழ்விழந்தோர்
ஏராளம் இவ்வுலகில்

இச்சடங்கு இனிமேலும்
இருக்கவேண்டாம் இம்மண்ணில்
அடுத்தவர்நல் வாழ்க்கைக்காய்
அழித்திடுவோம் இந்நிலையை

தமிழ்மக்கள் மகிழ்ச்சியினை
தடுத்துநிற்கும் இவ்வழக்கை
ஒழித்துவிட வேண்டுமென்றால்
ஒன்றுபட்டு முயலவேண்டும்

ஆவேசம் கொண்டதனால்
அறிவிழந்து நிற்கின்றீர்
அமைதியாய்ச் சிந்தித்து
அணிதிரள வந்திடுவீர்

உங்கள் மகனுக்கு
உரியதுணை தேடுங்கள்
வியாபாரச் சந்தையிலே
விற்பனைக்கு வைக்காதீர்

அடுக்காத வழக்கத்தை
அழிப்பதற்காய் உம்முடனே
அணிதிரள எப்போதும்
ஆண்மக்கள் நாம்தயாரே.

Friday, February 6, 2009

திருமணம் செய்து கொள்ள முன் இதை வாசியுங்கள்

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

***

நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம்.

நபர் 2: எப்படி?

நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா?

***

நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா?

நபர் 2 : தெரியாது

நபர்1 : திருமணம் செய்து கொள்வது

***

நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு திருமணங்களைச் செய்வது ஏன் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது?

நபர்2 : ஒரே குற்றத்திற்கு 2 முறை தண்டனை வளங்குவதற்கு சட்டத்தில் இடமில்லாதபடியால்

Thursday, February 5, 2009

வாகன விபத்துக்களைத் தடுக்கும் புதிய வாகனப்பட்டி

அண்மைக்காலத்தில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அனேகமானவற்றுக்கான காரணத்தைக் கண்டுபிடித்த செல்லமுத்து அண்ணரால் புதிய வாகனப் பட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அணிந்து கொண்டால் பெருமளவான வாகன விபத்துக்கள் தடுக்கப்படும்.

மிகக் குறைந்த செலவில் வீட்டிலே உங்களாலேயே தயாரிக்கக்கூடிய வாகனப் பட்டி இதோ:அபிசேகம்

நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. யமனுடைய கோட்டை வாயில் வரை சென்று மீண்டு வந்தாயிற்று. இது சாத்தியமா? நடக்கக் கூடியது தானா? நான் காண்பது கனவா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதில் இது நனவு தான் என்று தெரிகிறது.

இனிமேல் தினம் தினம் தூக்கமற்ற நீண்ட இரவுகளாய் அம்மாவை நினைத்து கண்கலங்கி, இராப்பொழுதுகளைக் கழிக்கத் தேவையில்லை. சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஒரேயொரு தகரப் பாத்திரத்தையே இரவில் சிறுநீர் கழிக்கும் பாத்திரமாகப் பாவிக்கும் கொடுமை இனியில்லை. இன்றைக்கு யார் வருவார் எப்படியான சித்திரவதைகளைச் செய்யப் போகிறார்கள் என்ற ஏக்கம் இனியில்லை.

நாட்டைக் காக்கப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிங்கள அரசின் கைப்பிள்ளைகளாக மாறி தமிழர்களைக் கடத்திச் சென்று பணம் பறித்துச் சிங்கள அமைச்சர்களிடம் ஒப்படைக்கும் கொடுமையைப் பத்திரிகையிலும் வானொலியிலுமே கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் அந்த அனுபவம் விரையில் கிடைக்கப் போகிறது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த நரக வேதனையை கடந்த ஆறு மாதங்களாக அனுபவித்தாயிற்று. இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று மற்றவரிடம் கடன் வாங்கியும் அவர்கள் கேட்ட தொகையைக் எனது மாமா கொடுத்த பின்பு தான் அந்தச் சகதியினுள் இருந்து மீண்டு வந்தேன்.

ஆனால் இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் எதையும் அறிந்திராத அம்மாவிற்கோ இது சந்திப் பிள்ளையாரின் திருவிளையாடல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் தான் கடவுளுக்குத் தருவதாக வேண்டிக் கொண்ட ‘லஞ்சம்’ தான் என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாய் ஒரு எண்ணம். அம்மா பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் பூரிப்பின் உச்சக் கட்ட உற்சாகம். இந்த ஆறு மாதங்களாக அவர் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார். பெற்ற பிள்ளை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்றறியாது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். அவை எல்லாவற்றற்குமாகச் சேர்த்து வட்டியும் முதலுமாகச் சந்தோசப்படுகிறார். எனது அம்மாவிற்குக் கிடைத்த அதிஸ்டம் கிடைக்காது எத்தனை தாய்மார்கள் தினம் தினம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

ஒப்புக் கொண்ட ‘லஞ்சங்களை’ ஒவ்வொன்றாய்க் கொடுக்கும் பணி ஆரம்பமாகி விட்டது. அதன் முதற் கட்டமாக இன்று சந்திப் பிள்ளையாருக்கு அபிசேகம் நடக்கப் போகிறது. ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பால், தயிர், தேன், இளநீர் என்பன வாங்கி அடுக்கியாயிற்று. பூமாலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக என்னையும் பட்டினி போட்டு விட்டார்கள். ‘வெளியே’ கொண்டு வந்ததற்கு நன்றிக் கடனாக நானும் விரதம் இருக்க வேண்டுமாம். அம்மாவைச் சீண்டிப் பார்ப்பதற்காக மெல்ல வாயைத் திறந்தேன்.

“அந்த அறுவாங்;கள் தான் ஆறு மாசமா பட்டினி போட்டிட்டாங்கள் எண்டால் இண்டைக்குப் பிள்ளையாரும் என்னைப் பட்டினி போட்டிட்டார்.

அம்மா பதறிப் போய் விட்டார்.

“டேய்! என்ன கதை கதைக்கிறாய்? இப்படி கதைச்சுக் கொண்டு திரிஞ்சதுக்குத் தானே கடவுள் உன்னை உள்ளுக்கை அனுப்பி எடுத்தவர். இன்னும் திருந்திற பாடாய் காணயில்லை.”

பிள்ளையாரா என்னைப் பிடித்து உள்ளுக்குப் போட்டார? கடவுளின் முகத்திலே எப்போதும் கனிவு பொங்குமாமே? வந்தவர்களின் முகத்திலே கனிவை மருந்துக்கும் காணவில்லையே? கொலை வெறியல்லவா தெரிந்தது.இத்தனை கொடுமைகளையும் அனுபவிப்பதற்கு நான் செய்த குற்றம் தான் என்ன? ஈழத்து மண்ணிலே தமிழனாகப் பிறந்தது குற்றமா? இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமானால் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று ‘அவர்கள்’ கூப்பிட்ட போது போகாமல் தலைநகரில் வாழ வந்தது குற்றமா? வந்த இடத்தில் எனது முயற்சியால் வியாபாரத்தைத் தொடங்கி பணம் சேர்த்தது குற்றமா? எனக்கு இன்னும் எதுவுமே புரியவில்லை.

என் மனதில் எழுந்த கேள்விகளை வெளியே கொட்டி அம்மாவை ஏன் கவலைப்படுத்துவானேன் என நினைத்து மௌனமாகி விட்டேன். அப்போது தான் வெளியே அந்தக் குரல் கேட்டது.

“அம்மா தர்மம் போடுங்கம்மா”

எட்டிப் பார்க்கிறேன். ஒரு நடுத்தர வயதுப் பெண். நாற்பது வயதிருக்கலாம். வறுமை இன்னுமொரு பத்தைக் கூட்டிக் காட்டியது. வாழ்க்கைச் சக்கரத்தின் இடையில் அகப்பட்டு நன்றாகச் சிதைந்து போயிருந்தாள். முகத்திலே ஏழ்மையின் கோடுகள். கவலை தோய்ந்த அந்த முகம் ஆயிரம் கதை பேசின. பக்கத்திலே ஒரு சிறுவன் ஐந்து வயதிருக்கலாம். அவளுடைய மகன் என்பதை முகம் அப்படியே படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. தாயின் சோகத்தை பங்கு போட்டுக் கொள்ளும் அளவிற்கு இன்னும் பக்குவமடையவிலலை. சிணுங்கிக் கொண்டே தாயன் சேலைத் தலைப்பைப் பிடித்திழுக்கிறான்.

“ எங்கை இருந்தம்மா வாறியள். இந்தப் பிள்ளையின்ரை தகப்பன் எங்கை”

மெள்ள கேள்விக் கணைகளை வீசுகின்றேன்.

“அதை ஏன் தம்பி கேக்கிறீங்கள். அந்த ராசா இருந்தால் என்னை இப்படிக் கஸ்டப்பட விட்டிருப்பாரே? அந்த மனுன் என்னையும் பிள்ளையையும் எப்படி வைச்சிருந்தவர். பாழ்படுவான்கள் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டான்கள். கடற் தொழிலுக்குப் போனவரை நாயைச் சுடுற மாதிரிச் சுட்டு இழுத்துக் கொண்டு போனவங்கள். அந்த மகாராசன்ரை உடம்பைக் கூடப் பாக்கத் தர இல்லை”

குரல தழுதழுத்தாலும் வார்த்தைகள் கோர்வையாக வருகின்றன. அவள் அந்தச் சம்பவத்தைப் பல முறை பலரிடம் ஒப்புவித்திருக்கிறாள் என்பது அவள் கதை சொன்ன பாங்கிலிருந்து தெரிகிறது.

துயரங்கள் அடுத்தவரோடு பகிரப்படும்போது ஒரு ஆறுதல் கிடைக்கத்தான் செய்கிறது அல்லவா? இந்த யுத்தம் யாரைத் தான் விட்டது? எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. பாதிப்பின் அளவு தான் வித்தியாசப்படுகிறது. சிலருக்கு காலிலே ஏற்பட்ட சிறு சிராய்ப்புப் போலத் தோற்றாததாக…. இன்னுஞ் சிலருக்கு காலை இழந்தது போலப் பலமானதாக…. இன்னுஞ் சிலருக்குத் தலையே போனது போல மீள முடியாமல்…. எத்தனை துயரங்கள்? எத்தனை அழிவுகள்? ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒவ்வொரு மாதிரியான சோகக் கதைகள்.

இதற்குள் அம்மாவிற்கு சத்தம் கேட்டு விட்டது. பத்து ரூபா காசைக் கொண்டு வந்து அவளிடம் கொடுக்கிறாள். வழமையாக இரண்டு ரூபாய் தானம் செய்யும் அம்மா எனது விடுதலையைக் கொண்டாடும் விதமாக ரேட்டைப் பத்து ரூபாவாக உயர்த்தியிருப்பது போலத் தெரிகிறது.

“அம்மா நீங்கள் நல்லா இருக்கோணும். சாப்பிடுறதுக்கு ஏதாவது இருந்தால் தாங்கம்மா…நானாவது பசியைத் தாங்கிக் கொள்ளுவன். இந்தப் பச்சை பிள்ளை பாவம். பசியிலை கத்துறான்.

“ நாங்கள் இண்டைக்கு விரதம் எண்ட படியால் ஒண்டும் சமைக்க இல்லை. போயிட்டு இன்னொரு நாளைக்கு வாங்கோ.”

பெண்ணின் முகத்திலே ஏமாற்றம். திரும்பி நடக்கிறாள். பையன் கத்திக் கொண்டே பின்னால் ஓடுகிறான்.அபிசேகத்திற்கு வாங்கி வைத்திருக்கும் பாலின் ஞாபகம் மனதில் எழ மெல்ல அம்மாவின் காதைக் கடிக்கிறேன்.

“அம்மா அபிசேகத்திற்கு வாங்கின பால் இருக்குதெல்லே. அதைக் குடுப்பமே”

நான் முடிக்கவில்லை. அம்மா பதறிப் போய் விட்டார்.

“விசர்க் கதை கதைக்கிறாய். அது சுவாமிக்கு வாங்கி வைச்சதெல்லே. அதைக் குடுக்கிறது சுவாமி குற்றம் ஆகிவிடும்…”

“ஏனம்மா சுவாமிக் கெண்டு வைச்ச பாலை அந்த ஏழைக்குக் குடுத்தால் சுவாமி குற்றமே”

“நீ உந்த வேதாந்தக் கதைகளை விட்டுப் போட்டு வேலையைப் பார் பாப்பம்”

அம்மா அந்தக் காலத்து மனிசி.அவவுக்கு விளங்கப்படுத்த முடியாது. நான் மௌனியாகி விடுகிறேன். என்ன தான் வாயை மூடி மௌனியாகி விட்டாலும் என் மனதிற்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். ஆயிரம் கேள்விகள். கடவுள் அன்பின் வடிவமானவர். சகல ஜீவராசிகளையும் படைத்துக் காத்து வருகிறார். உயிர்கள் படும் துன்பங்களை நீக்குவதற்காக அடிக்கடி அவதாரங்களை எடுக்கிறார். என்றெல்லாம் படித்தோமே.தாயை இழந்த பன்றிக் குட்டிகளின் பசியைப் போக்குவதற்காக பன்றி உரு எடுத்து வந்தாராமே? அத்தகைய கடவுள் தனது அபிசேகத்திற்குரிய பாலின் மூலம் அந்த ஏழைச் சிறுவனின் பசி நீக்கப்பட்டிருந்தால் சந்தோசப்பட்டிருக்க மாட்டாரா?பெரும் பணச் செலவில் நடாத்தப்படும் அபிசேகங்களையும் திருவிழாக்களையும் கடவுள் உண்மையில் விரும்புகிறாரா? அலலது இவையெல்லாம் நடுவில் வந்தவர்களின் இடைச் செருகல்களா?

சிந்தனை வயப்பட்டிருந்த என்னை குசினிக்குள் இருந்து கேட்ட ‘டமால்’ என்ற சத்தம் நிஜவுலகிற்குள் கொண்டு வருகிறது. அபிசேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பால் போத்தல் விழுந்து போய் உடைந்து கிடக்கிறது. தனது கைவரிசையைக் காட்டி விட்ட பெருச்சாளி பயந்துடன் கூரைக்குள் ஏறி மறைகிறது.அம்மாவும் ஓடி வந்து எட்டிப் பார்க்கிறார்.

“பிள்ளைக்குக் குடுக்காத பால் எனக்கும் வேண்டாம் எண்டு பிள்ளையார் சொல்லிப் போட்டார் போலை’’

வழமை போலவே அம்மாவைச் சீண்டுகிறேன்.ஆனால் அம்மா என்மீது கோபிக்கவில்லை. மாறாக மௌனம் காக்கிறார். எனது சந்தேகங்கள் சிலவற்றுக்கு விடை கிடைத்ததை போல உணர்கிறேன். அம்மாவின் முகத்திலும் தெளிவு தெரிகிறது.

Tuesday, February 3, 2009

பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை

ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில நாடுகளும், `பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தி அதனை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றனர்.

ஈழ மண்ணினதும், ஈழத் தமிழர்களதும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற எவரும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, தமது சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவதற்காக நடக்கின்ற இந்தப் போராட்டத்தை, பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்தியதற்காக நிச்சயமாய் ஒருநாள் வெட்கித் தலைகுனிவார்கள்.

தம்மண்ணைத் தாமே ஆண்ட ஈழத் தமிழரது வரலாற்றையும் வியாபார நோக்கங்களுக்காக இலங்கைக்குள் வந்தவர்கள் தமது பரிபாலனத் தேவைகளுக்காக விட்ட தவறுகளையும் தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தமது கதிரை ஆசைக்காகச் செய்த துரோகங்களையும் சிங்கள இனவெறி அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் சற்றே மீட்டுப் பார்ப்போம்.

ஆரியரால் தம்பபன்னி என்றும் கிரேக்கரால் செரண்டிப் என்றும் ஆங்கிலேயரால் சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவானது பண்டைக் காலத்தில் பல அரசர்களின் கீழ் ஆளப்பட்ட பல பிரதேசங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. அநுராதபுர இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், வன்னி இராச்சியம், பொலநறுவை இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என இந்த அரசுகள் பல காலப்பகுதிகளிலும் பல பெயர்களால் அழைக்கப்பட்டும், ஆளப்பட்டும் வந்திருக்கின்றன.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய இராச்சியங்கள் தமிழர்களாலேயே ஆளப்பட்டு வந்திருக்கின்றன. சிங்கள இராசதானிகள் கூட பல தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக அநுராதபுரத்தை ஆண்ட எல்லாளனுடைய வரலாற்றை சிங்களவர்களால் கூட மூடி மறைத்துவிட முடியவில்லை. அதேபோல 1815ம் ஆண்டு கண்டியை பிரிட்டிஸார் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது கண்டியை ஆண்டு கொண்டிருந்த சிறிவிக்கிரம இராஜசிங்கனும் தமிழ் அரசனே. அதேபோல யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியன்இ வன்னியில் குறுநில மன்னனாக இருந்த பண்டார வன்னியன் ஆகியோர் அந்நியரை எதிர்த்து காட்டிய வீரம் வரலாற்றில் மறக்க முடியாதது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் ஆளப்பட்ட காலத்தில் கூட இலங்கைத்தீவு முழுவதும் ஒரே ஆட்சிக்குட்பட்டதாக அமையவில்லை. 1815ம் ஆண்டு கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றி இலங்கைத்தீவை தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் இலங்கை பல பரிபாலனப் பகுதிகளாகவே ஆளப்பட்டு வந்தது. ஆனால் 1833ம் ஆண்டு கோல்புறூக் மற்றும் கமரோன் ஆகியோரின் பரிந்துரையுடன் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தின்படியே இலங்கை ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.

தனியாக ஆளப்பட்ட தமிழர் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களுடன் சேர்த்;து ஆளப்பட்ட போதிலும் இது குறித்து தமிழர் தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடின்றி கல்வித்தகமைக்கும் திறமைக்கும் முன் உரிமை கொடுத்தமையையும் தமிழ்த் தலைவர்களினது அசமந்தப் போக்கையும் இதற்கான காரணங்களாகக் கூறலாம். இதேபோல சிங்களத் தரப்பிடமிருந்தும் ஆங்காங்கே சில சல சலப்புக்கள் ஏற்பட்ட போதிலும் பெரிதான அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலை 1910ம் ஆண்டு வரை நீடித்தது.

ஆனால் 1910ம் ஆண்டிற்கும் 1948ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் சிங்களப் பேரினவாதிகளின் சுயரூபம் வெளிப்பட்ட சம்பவங்களும் இன வன்முறைச் சம்பவங்களும் நடந்து முடிந்தன. இந்த வகையில் 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாகச் செயற்பட்ட பிரிட்டிஸ் நிர்வாகம் இராணுவ சட்டத்தை பிறப்பித்தது. கலக்காரர்களை படையினர் சுட்டுக் கொண்டனர். இராணுவச் சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்தனர். பலருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினர். சுதந்திர இலங்கையின் முதற்பிரதமராக இருந்த டி.எஸ் சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் சட்டசபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பிரதிநிதியாக இருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் லண்டனுக்குச் சென்று மரணதண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்காக வாதாடி அவர்களை விடுதலை செய்வித்தார். இதனால் இராமநாதன் நாடு திரும்பிய போது அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரது வீடுவரை தாமே இழுத்துச் சென்றது வரலாறு. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

அக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த முக்கியமான அரசியல் இயக்கங்களாக இலங்கைத் தேசிய சங்கம், அரசியல் சீர்திருத்தக் கழகம், யாழ்ப்பாண சங்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம். சேர் பொன் அருணாசலம் தலமையில் இயங்கிய அரசியல் சீர்திருத்தக் கழகம் 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்றது. இலங்கைத் தேசிய காங்கிரஸின் உதயத்தோடு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பொன் அருணாச்சலத்தின் கனவு சில காலங்களுக்குள்ளாகவே தவிடு பொடியானது. சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப் போக முடியாமல் அல்லது சிங்களத் தலைவர்கள் ஒத்துழைக்காததால் பொன் அருணாச்சலம் தன் தலைமைப் பதவியைத் துறந்தார்.

1823ம் ஆண்டு சேர் பொன் அருணாசலம் இலங்கைத் தமிழர் மகாசபை எனும் அமைப்பை ஆரம்பித்தார். அதன் அங்குராப்பண கூட்டத்தில் அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

‘சிங்களத் தலைவர்களுடன் இனியும் ஒத்துப் போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர்கள் தன் மானத்துடன் வாழ தனியான அமைப்பொன்று அவசியம். அதுதான் இனி நமது இலக்கு. அதனை அடைய தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை, தோழமை அவசியம். நமது இலக்கை விளக்கி நாடெங்கிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பெருமைக்குரிய பாரம்பரியத்தின் சொந்தக்காரரான நாம் தமிழர் நலன்களுக்காகவே மட்டும் பாடுபடும் சுயநலமிகள் அல்லர் என்பதையும் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும்.’

இன வேறுபாடின்றி, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிங்களத் தலைவர்களினது நலனுக்காகவே செயற்பட்ட ஒரு தலைவரிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வருவதற்கு அவர் சிங்களத் தலைவர்களால் எவ்வளவு தூரம் வஞ்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நேயர்கள் புரிந்து கொள்வீர்கள்.

இலங்கைக்கென புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1927ம் ஆண்டு டொனமூர் இலங்கைக்கு வந்தார்.டொனமூர் கமிசனிடம் 50இற்கு 50 பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஜி.ஜி. பொன்னம்பலம் வலியுறுத்த மக்கள் தொகையில் 64வீதமாக இருந்த சிங்களவர்கள் அதனை எதிர்த்தனர். ஜி.ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை நிராகரித்த டொனமூர்; 1931 இல் சர்வஜன வாக்குரிமையைப் பிரகடனம் செய்தார்.டொனமூர் திட்டத்தின்படி உருவான அரசாங்க சபைக்கு 1931இல் தேர்தல் நடந்தது. யாழ் இளைஞர்கள் பகிஸ்கரித்ததால் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காங்கேசன்துறை பருத்தித்துறை ஆகிய நான்கு தொகுதிகளின் தேர்தலும் நடக்கவில்லை.இவ்வாறாக முதலாவது பொதுத் தேர்தலிலேயே தமிழர்கள் தேர்தல் பகிஸ்கரிப்பை ஆரம்பித்து விட்டது வரலாறு.

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் 2ம் உலகப் போரும் ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் இலங்கை அரசியலில் தமது அக்கறையைக் காட்டவில்லை.இந்தக் கால கட்டத்தில் சிங்களப் பேரினவாதச் சக்திகளும் எழுச்சி பெறத் தொடங்கின. A.P ஜெயசூரியா முதலான சிங்கள இனவாதிகளையும் சேர்த்துக் கொண்டு SWRD பண்டாரநாயக்கா சிங்கள மகாசபையை அமைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களும் பொன்னம்பலம் தலைமையில் தமிழர் மகா சபையை அமைத்து 50: 50 என்ற கோசத்தை தீவிரமாக எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து டொமினியன் அந்தஸ்தில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கத் தீர்மானித்து அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு தலைவர்களைக் கேட்டனர். தலைவர்களால் வழங்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விசாரித்து தீர்மானங்களை மேற்கொள்ள சோல்பரிக் கமிசனை நியமித்தது.தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைக்க SJV செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள் கொழும்பு சாகிராக் கல்லூரியில் கூடி ஆலோசித்தனர். அங்கு வைத்துத் தமிழர் மகா சபை தமிழ் காங்கிரசாக மாறியது. 50: 50 கோரிக்கையை தக்க நியாயங்களுடன் சோல்பரிக் கமிசன் முன் வைக்கத் தீரமானித்தது. ஆனால் அந்தத் திட்டத்தை சோல்பரிக் கமிசன் கண்டு கொள்ளாமல் அமைச்சர்கள் வழங்கிய திட்டத்தை சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொண்டது.இதனால் கோபமடைந்த தமிழ் தலைவர்கள் சோல்பரிக் கமிசனால் தயாரிக்கப்பட்ட வெள்ளையறிக்கையை எதிர்த்து வாக்களிக்கும் படி அரசாங்க சபையின் தமிழ் உறுப்பினர்களைக் கேட்க அவர்களும் ஒத்துக் கொண்டனர்.இதனை அறிந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் உறு;பபினர்களைச் சந்தித்து 'முதலில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைவது தான் முக்கியம். பிறகு எங்களிடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எங்களை நம்புங்கள்’’ என்று பலவாறாக வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். அதை நம்பி ஏமாந்த தமிழ் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் வெள்ளையறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதுஅதற்கிணங்க இலங்கைக்கும் டொமனியன் அந்தஸ்தில் சுதந்திரம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியாக ஆண்டு வந்த தமிழினம் அந்நியரிடம் அடிமையாகி இருந்த காலம் முடிந்து சிங்களவரிடம் அடிமைப்பட்ட வரலாறுக்கு கட்டியம் கூறப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடந்த தேர்தலில் இலங்கைத் தேசிய காங்கிரசும் சிங்கள மகா சபையும் இணைந்து மலர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதிலும் அதற்குப் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. எனினும் DS சேனநாயக்கா ஆட்சியடைக்க முன்வந்தார். அப்போது ஆளுனராக இருந்த sir ஒலிவர் குணதிலக தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் இந்தியர் என்ற அனைத்துத்தரப்பும் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்பட்டாலே முழு சுதந்திரம் கிடைக்கும் எனச் சொன்னதும் DS சேனநாயக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினார். சகல சமூகத்தவரையும் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது கூடத் தமிழர் அமைச்சரவையில் சேராமல் பகிஸ்கரித்திருந்தால் இலங்கைக்குப் ப+ரண சுதந்திரத்தை வழங்குவது குறித்து ஒன்றிற்கு இரண்டு தடவைகள் யோசித்திருப்பார்கள். ஆனால் சி. சுந்தரலிங்கமும் சி. சிற்றம்பலமும் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டு ஒட்டுக்குழுக்களின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்கள்.

அமைச்சரவையில் அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றதால் திருப்தியடைந்த பிரிட்டிஸ் அரசு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் நாள் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர்.அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த வரலாறு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சுதந்திரம் பெற்றதுமே சிங்கள இனவெறி மௌ;ள மௌ;ள விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.தனக்குப் பதில் பிரதமர் பதவி தரப்படவில்லை என்ற கோபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த SWRDபண்டாரநாயக்கா உடனடியாக மக்கள் மனதில் இடம்பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்தார். மதம், மொழி என்பனவே மக்களைக் கவர்வதற்கான இலகுவான வழி எனக் கண்ட பண்டாரநாயக்கா நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.அந்த வாக்குறுதிகள் அவரைப் பிரதமர் கதிரையிலும் அமர்த்தின. தான் கொடுத்த வாக்குறுதிப்படியே அதனைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதற்கான சட்டநகலில் நியாயமான அளவு தமிழ் உபயோகம் என்ற பதத்தையும் சேர்த்துக் கொண்டார். அதை எதிர்த்து பேராசிரியர் AP ஜயசூரியா நாடாளுமன்ற வளவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிக்க பயந்து போன பண்டாரநாயக்கா நியாயமான அளவில் தமிழ் என்ற பதத்தை நீக்கி தனிச் சிங்களச் சட்ட வரைவைக் கொண்டு வரத் திட்டமிட்டார்;.

தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட தினத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் தந்தை செல்வாவும் தொண்டர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். அரசினால் ஏவிவிடப்பட்ட குண்டர்கள் வந்து தந்தை செல்வாவையும் தொண்டர்களையும் தாக்கினர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தூண்டி விடப்பட்டன. தமிழர் கடைகள் உடைமைகள் நொறுக்கப்பட்டன. 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இதனிடையே தமிழர் தாயகத்தை கூறு போடும் ஒரு முயற்சியாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவு படுத்தப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த புத்தளம் போன்ற பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகினர். மணலாறு பகுதிக் குடியேற்றம் தமிழர் தாயகத்தைக் கூறு போட்டது. அரசுக்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்து வந்த சி. சுந்தரலிங்கம் சிங்களவரின் போக்கினால் வெறுப்புற்று 'தனித் தமிழீழம் தமிழர் மீட்சிக்கு வழி' எனக் குரல் கொடுத்தார்.தமிழ் மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பண்டாராநாயக்கா தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த முன்வந்தார். இந்தப் பேச்சுக்களின் முடிவில் பண்டா செல்வா ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவு சுயாட்சியை வழங்க பண்டாரநாயக்கா முன்வந்தார். இதை அறிந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி தன் பங்குக்கு இனவாதத்தைக் கையில் எடுத்தது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த JRஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயாத்திரை ஒன்றைத் தொடங்கினார். இந்த நிலமையைத் திசை திருப்புவதற்காக பண்டாரநாயக்கா வாகன இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்கள சிறி எழுத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் பகுதிகளில் இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் பகுதிகளில் தமிழில் சிறி என்று எழுதவும் சிங்கள எழுத்துக்களை அழிக்கவும் செய்தனர். இந்தப் போராட்டங்கள் மலையகத்திலும் நடைபெற்றன. இதன் போது பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் ச+ட்டில் இரண்டு தமிழ் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.பண்டாரநாயக்கா அமைச்சரவையில் மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்த விமலா ஜெயவர்த்தனா பிக்குகளைத் திரட்டிக் கொண்டு வந்து பிரதமரின் ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடங்கினார். பண்டாரநாயக்காவும் பண்டா செல்வா ஒப்பந்தம் செல்லாது என்று எழுத்து மூலம் உறுதியளித்து அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.சிங்களத்தலைவர்களால் ஒப்பந்;தங்கள்; எழுதப்படுவதும் அல்லது வாய்மொழி உறுதி மொழிகள் வழங்கப்படுவதும் பின்பு மீறப்படுவதுமான சம்பவங்கள் தொடர் கதைகள் ஆகின.

இந்த நிலையில் தமிழர் தலைவர்கள் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய வவுனியாவில் கூடினர்கள். இந்த மாநாடு முடிந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தலைவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் தலைவிரித்தாடின. நிலமை கட்டு மீறியது. தேசாதிபதியாக இருந்த ஒலிவர் பிரதமரிடம் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துங்கள் என்று வற்புறுத்தினார். இலங்கை அரசு இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியப் படைகளை வரவழைக்க வேண்டியிருக்கும் என்று அவர் மிரட்டியதைத் தொடர்ந்தே பிரதமர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வினை விதைத்தவன் வினையையும் தினை விதைத்தவன் தினையையும் அறுக்கத்தானே வேண்டும். சிங்கள மக்களிடம் இனவெறியை ஊட்டி அரச சுகம் கண்ட பண்டாரநாயக்காவைச் சந்திக்கவென வந்த பௌத்த துறவி ஒருவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பண்டாரநாயக்கா கொல்லப்பட்டார். சிறிது காலத்தின் பின் கணவனின் இறப்பைக் காட்டி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் கதிரையில் அமர்ந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் 1961ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஆணையை எதிர்த்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்தனர். இந்த நிலையில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்த சிறிமா வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி வைத்தார். தமிழரசுக் கட்சியைத் தடை செய்தார். கட்சித்தலைவர்களை பனாகொடை இராணுவ முகாமில் அடைத்தார். நியாயம் கேட்ட தமிழரை இராணுவ ரீதியாக அடக்கும் வரலாறு ஆரம்பமாயிற்று1965ம் ஆண்டு. தேர்தல் காலம். இந்தத் தேர்தலில் டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் அரசமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசிய அரசு அமைப்பதற்கு தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் என்பவற்றுக்கு அழைப்பு விடுத்தார். இதற்குச் தந்தை செல்வா இணங்கவில்லை. இதற்கிடையில் தமிழரசுக்; கட்சியின்; சில உறுப்பினர்கள் கூடி அமைச்சரவையில் இணைய வலியுறுத்தினர். அதற்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் மு. திருச்செல்வம் பின்கதவால் உள்ளுராட்சி அமைச்சரானார்.

1970 ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மீண்டும் சிறிமா பண்டாரநாயக்கா பிரதமரானார். இந்தக் காலப்பகுதியில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற றோஹண வீஜேவீரா தலைமையிலான ஜே.வி. பி. முயற்சித்தது. ஒரே தினத்தில் இலங்கையில் இருக்கும் பொலிஸ் நிலையங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது அவர்களது திட்டமாக இருந்தது. திட்டமிடுதலில் ஏற்பட்ட தவறினால் திட்டம் வெளியே கசிந்து பிரதமர் உசாராகி விட்டார். இருந்தாலும் மொனராகல உள்ளிட்ட சில பகுதிகளை ஜெவிபியினர் சில தினங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் கொடூரக் கரங் கொண்டு இந்தப் போராட்டத்தை சிறிமா முடக்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டனர். விஜேவீரா உள்ளிட்ட பலர் கைது செயயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்தக் காலப்பகுதியில் இனியும் சிங்கள மக்களோடு இணைந்திருக்க முடியாது என்று உணர்த்தும் மற்றொரு சட்டம் அமுலாக்கப்பட்டது. கல்வியையே தமது மூலதனமாகக் கொண்டு தமிழினம் முன்னேறுவது கண்டு பொறுக்க முடியாமல் சிறிமா அரசினால் தரப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி சிங்கள முஸ்லிம் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கூடிய புள்ளிகளை எடுத்துப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய நிலை தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இளைஞர்கள் மத்தியில் விடுதலையின் அவசியத்தை வீச்சாய் சொல்ல வைத்த சம்பவம் இது. இதன் விளைவாய் தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது.

இதனிடையே புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இலங்கையைக் குடியரசாக்கும் முயற்சியிலும் சிறிமா ஈடுபடத் தொடங்கினார். வழமை போலவே தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகள் எதுவும் செவிசாய்க்கப்படாமலே யாப்பு உருவானது. இந்த யாப்புக்கு தனதும் தமிழ் மக்களதும் எதிர்ப்பைக் காட்ட தந்தை செல்வா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். அத்துடன் அவர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்.

தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்ட மற்றொரு சம்பவம் 1974இல் நடைபெற்றது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கூடி தம் தமிழுக்காக விழா எடுத்து வந்தனர். அந்த வகையில் நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடிவாகியது. மாநாட்டை அரச ஆதரவுடன் கொழும்பில் நடத்தலாம் என அரசாங்கம் அழைப்பு விடுத்தது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இதன் மூலம் மறைப்பதற்கு அது திட்டம் போட்டது. அந்தத் திட்டத்தைப் புரிந்து கொண்டு மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவது என முடிவானது. ஆத்திரம் கொண்ட அரசு தமிழ் மக்களுக்குப் பாடம் புகட்டத் திட்டம் போட்டது.மாநாட்டின் இறுதி நாளன்று யாழ்ப்பாணமே தமிழ் அன்னைக்கு விழா எடுக்கும் களிப்பில் மூழ்கியிருக்க சிங்களப் பொலிசார் திட்டமிட்டு அராஜகத்தை அரங்கேற்றினர். மாநாட்டு மண்டபத்தில் தடியடிஇ கண்ணீர் புகைக் குண்டுவீச்சுக்களை நடத்தினர். மினசாரக் கம்பிகளை அறுத்துப்; போட்டனர். இந்தக் களேபரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இத்தனைக்கும் அவர்கள் செய்த தவறு தமிழன்னைக்கு விழா எடுத்ததைத் தவிர வேறில்லை.

1975ம் ஆண்டு காங்கேசன்துறை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட தந்தை செல்வா அமோக வெற்றி பெற்றார்.1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டுக்கோட்டை மாநாடு நடத்தப்பட்டது. அங்கு தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றம் பெற்றது. அதன் தலைவர்களாக தந்தை செல்வாஇ ஜி.ஜி. பொன்னம்பலம், S. தொண்டமான் ஆகியோர் இருப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.அம்மாநாட்டிலே இனி சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவது என உறுதி எடுக்கப்பட்டதுஇ இந்தத் தீர்மானம் குறித்து தந்தை . செல்வா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

`தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி கேட்டோம். அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு மூலம் உணர்ந்தோம். எனவே நாங்கள பிரிந்து வாழ்வது தான் வழி என்ற முடிவுக்கு வந்து விட்டோம். இதை நாம் செய்யாவிடில் தமிழனம் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம்’

இதனிடையே தமிழாய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்குப் பழிவாங்குவதற்கு உரும்பிராயில பிறந்த சிவகுமாரன் முயற்சிக்கிறார். அந்தக் கொலைக்குக் காரணமான பொலிஸ் உயர் அதிகாரி சந்திரசேகரவைக் கொலை செய்யத் திட்டமிட்டு அவரைத் தேடித் திரிகிறார்; சிவகுமாரன். தெல்லிப்பழையில் வைத்து சந்திரசேகரா பயணம் செய்த ஜீப் வண்டியின் மீது குண்டு வீசுகிறார்;. ஆனால் அந்தக் குண்டு வெடிக்கவில்லை. இந்த நிலையில் பொலிசார் சிவகுமாரனை வலை வீசித் தேடுகின்றனர். கடைசியில் பொலிசாரால் சுற்றி வழைக்கபபட்ட நிலையில் சயனைட் அருந்தி வீரமரணமடைகிறார்; சிவகுமாரன். இளைஞர் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்ட சிவகுமாரனின் நினைவாக உரும்பிராயில் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இப்படியாய் சிங்களவருக்குப் புரியாத அகிம்சை மொழியில் பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அவர்களுக்குப் புரிகின்ற பாசையிலே பேசுவதற்கு இளைஞர்கள் அணிவகுக்கத் தொடங்கிக் கொண்டிருந்தனர். இந்த இளைஞர்களில் ‘தம்பி’ என்று மற்றவர்களால் அழைக்கப்படும் தேசியத்தலைவ்ர திரு பிரபாகரனும் ஒருவர்.இவரும் இன்னும் சில இளைஞர்களுமாய் இணைந்து புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் விடுதலைப் போரை ஆரம்;பிக்கின்றனர்.விரோதியை விடத் துரோகியை ஆபத்தானவர்கள் என்பதை உணர்ந்த இவர்களது பார்வை தமது பதவி சுகத்திற்காக அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழ் விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மீது பாய்கிறது.அந்த வகையில் சிறிமா அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்குக் காரணமாக இருந்தவரான அல்பிரட் துரையப்பாவைக் கொல்வதற்கு தேசியத்தலைவர் பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் திட்டமிடுகின்றனர். அதன் படி துன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் வைத்து 1975ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார்.சிறுபிள்ளை வேளாண்மை என்று எள்ளி நகையாடியவர்களும் மெல்லத் தமக்குள் குசுகுசுத்து இளைஞர்களின் வீரத்தைப் பேசும் சம்பவங்களுக்கு ஆரம்பமாய் அமைந்தது அந்தச் சம்பவம்.

புதிய தமிழ்ப் புலிகளின் நடவடிக்கைகளுக்கும் விஸ்தரிப்பிற்கும் ஆயுதக் கொள்வனவிற்கும் எனப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் புதிய தமிழ்ப் புலிகள் புத்தூர் வங்கிக்குள் புகுந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையடிக்கிறார்கள்1976ம் ஆண்டு வைகாசி மாதம் ஐந்தாம் திகதி புதிய தமிழ் புலிகள் இயக்கமானது தமிழீழ வடுதலைப் புலிகள் என்ற பெயருடன் புத்தூட்டம் பெறுகிறது. அல்பிரட் துரையாப்பா கொலை, புத்தூர் வங்கிக் கொள்ளை என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள அரசாங்கம் விசேட பொலிஸ் குழுக்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புகிறது.அவர்கள் அப்பாவி இளைஞர்கள் மீது தம் கோபத்தைக் காட்டுகிறார்கள். இது இளைஞர்கள் மத்தியில் தமக்கான ஒரு இராணுவத்தின் அவசியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. விளைவாய் பலரும் விடுதலை இயக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள். வங்கிக் கொள்ளைகளும் காவல்துறையினருக்கெதிரான தாக்குதல்களும் தொடர்கின்றன.

நாடு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் 1977 இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை வலியுறுத்தி தமிழீழத்திற்கு ஆணை தரும்படி வாக்குக் கேட்டது. அதன் படி வடக்கில் மொத்த பதின்நான்கு ஆசனங்களையும் கிழக்கில் ஐந்தில் நான்கு இடங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வென்றது. தென்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றது. சுதந்திரக் கட்சி படுதோல்வி காண தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் கிடைத்தது.

1977இல் மற்றும் ஒருமுறை தமிழ் மக்கள் மீது இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்தேவி ரெயில் அநுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளானது. பெரும் இனக்கலவரம் நாடு முழுவதும் தலைவிரித்தாடியது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அகதிகளாகப் பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தவர்கள் வடக்கு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை சிங்களமே ஒத்துக் கொண்டதற்கு அடையாளமிது.தமிழ் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கிறது எனக் கண்டு தமிழரையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற JRஜெயவர்த்தனா மாவட்ட அபிவிருத்தி சபை என்னும் எலும்புத் துண்டை வீசியெறிகிறார். அந்தத் எலும்புத்துண்டு கூட வேறு யாருடைய கையிலும் சிக்கி விடக்கூடாது. மாறாக தனது கட்சிக்கு விசுவாசமாக வாலையாட்டிக் கொண்டிருப்பவர்களிடமே சென்றடைந்து விட வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையிலிருந்து குண்டர்களை காமினி திசாநாயக்கா மற்றும் சிறில் மத்தியூ தலைமையில் அனுப்பி வாக்கு மோசடிக்குத் தயாராகிறார். ஆனாலும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும் தோல்வி கிடைக்கிறது. அவர்களது கோபம் தமிழ் மாணவர்கள் கல்வியல் காட்டும் அக்கறையைச் சிதைப்பதற்கான தார்க்கத்தைத் தேடுகிறது. அந்தக் கொடியவர்களின் தீக் கரங்கள் யாழ்ப்பாண நூலகத்தை பஸ்பமாக்குகிறது. 94 ஆயிரத்ததிற்கு மேற்பட்ட நூல்கள் மற்றும் ஆவணங்களுடன் தென்னாசியவின் சிறந்;த நூலகமாகக் காட்சி தந்த யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாகிறது.தமிழர்கள் ஆலய வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். கோயில் என்றாலே பக்தியுடன் பணிபவர்கள். அவர்கள் கோயிலுக்கு அடுத்தபடியாக மதிப்பது நூலகங்களையே. தாம் பூசித்த அந்தப் பெருங் கோயிலின் இழப்பு ஒவ்வொரு தமிழனது மனதிலும் ஆழப் பதிந்து விட்ட சோகமானது. தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோசத்தை அடிமனதில் பதியச் செய்து விட்டது.

1980 களின் ஆரம்பத்தில் வீறுகொண்ட இந்தப் போராட்டத்தில் பல இளைஞர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களில் காவற்துறையினருக்கெதிரான தாக்குதல்களும் துரோகிகளுக்கெதிரான தாக்குதல்களும் மெல்ல மெல்ல அதிகரித்தன.தமிழ் மக்களின் எழுச்சியை அடக்க JR ஜெயவர்த்தனா இராணுவத்தை ஏவி விட்டார். தனது மருமகன் திஸ்ஸ வீரதுங்கவிடம் அதிகாரங்களை ஒப்படைத்து வட இலங்கையில் இளைஞர்களின் எழுச்சியை அடியோடு துடைத்தெறிந்து விட்டு வரும்படி அனுப்பினார்.யாழ்ப்பாணம் வந்த திஸ்ஸ வீரதுங்க சர்வாதிகாரி போல் தன்னிஸ்டப்படி தமிழரைக் கைது செய்து சித்திரவதைகள், தாக்குதல்கள் என்று வெறியாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்.இராணுவத்தின் அட்டகாசம் இளைஞர்கள் மத்தியில் தோன்றியிருந்த விடுதலை நெருப்பை கொழுந்து விட்டெரியச் செய்தது.இளைஞர்கள் விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொண்டனர். இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.இந்த வகையில் 1982ம் ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய போராளிகளிடம் இருந்தவை இரண்டே இரண்டு ஆயுதங்கள் தான். அதில் ரிவோல்வரை வைத்திருந்த சங்கர் என்ற போராளி சந்திக்கும் முதல் தாக்குதல் களமும் அதுதான். அந்தத் தாக்குதலில் 4 காவற்துறையினர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு போராளிகள் வெற்றியுடன் மீள்கின்றனர்.அதே ஆண்டில் சங்கர் தங்கியிருந்த வீடு முற்றுக்கையிடப்படுகிறது. சங்கர் தப்பிக்கிறான். ஆனால் இராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டொன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. குருதி குமுறிப் பாய்கின்றது. அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற சங்கர் தன்னுடைய ஆயுதத்தை மற்றொரு போராளியிடம் ஒப்படைத்து விட்டு மயக்கமடைகிறான்;.இராணுவம் வீதி எங்கும் நிறைத்திருந்ததால் எங்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலை. மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கிறார்கள்.1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி தலைவரின் மடியிலே அவர் கைகளைப் பற்றியபடியே தன் இறுதி மூச்சை விடுகிறான் சங்கர். சங்கரின் இழப்பு சோகத்தைத் தந்தாலும் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்திலும் தாயகத்தை மீட்டேயாக வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் தங்கியிருந்த தேசியத் தலைவரும் நாடு திரும்புகின்றார். விடுதலைப் போர் வீச்சுப் பெறுகிறது.

1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி. அட்டகாசம் பண்ணித்திரியும் சிங்கள இராணுவத்திற்குப் பெரிய அடி ஒன்றைக் கொடுப்பதற்குப் புலிகள் தயாராகின்றனர். பலாலி வீதியில் ரோந்து செல்லும் வாகனத் தொடரை வழிமறித்து தாக்குவது தான் திட்டம். அதனைச் செயற்படுத்துவதற்காக தேசியத்தலைவருடன் கிட்டு, புலேந்திரன், செல்லக்கிளி உள்ளிட்ட போராளிகள் திருநெல்வேலியிலுள்ள தபாற் பெட்டிச் சந்தியினருகே காத்திருக்கின்றனர். வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்தத் தாக்குதலில் 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். சிங்களப் படைக்கெதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் அது.தாக்குதல் செய்தியைக் கேள்விப்பட்டதும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா அதிர்ந்து போகிறார். செய்தி தென்னிலங்கை எங்கும் பரவுகிறது. இறந்த பதின்மூன்று இராணுவத்தினரின் இறுதி நிகழ்வுகளும் பொறளை கனத்தையில் நடத்தப்படத் திட்டமிடப்படுகிறது.அங்கே மக்கள் வெள்ளம் கூடுகிறது. அன்று பௌத்தர்களுக்கு நோன்மதி தினம். அன்றைய தினம் மதுச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் அங்கு கூடியவர்கள் மது போதையில் இருக்கிறார்கள். ஏதோ திட்டத்துடன் கூடியிருப்பது தெரிகிறது. நேரம் கழிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சடலங்கள் வந்து சேரவில்லை. கனத்தையில் கூடியிருந்தவர்களின் கவனம் பொறளைப் பகுதியிலிருந்த தமிழ்க் கடைகளின் மீது திரும்புகிறது. அங்கிருந்த தமிழர் கடைகளைச் சூறையாடுகிறார்கள். சொற்ப நேரத்திற்குள்ளாகவே கொழும்பு முழுவதும் தமிழருக்கெதிரான தாக்குதல்கள் ஆரம்பித்து விடுகின்றன. தாக்குதல் நடத்தியவர்களின் கைகளிலே வாக்காளர் டாப்புகள். அதிலுள்ள தமிழ்ப் பெயர்களைக் கொண்டு வீடுகளைத் தேடிப் பிடித்துத் தாக்குகிறார்கள்.கலவரம் மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் பரவுகிறது. இராணுவமும் பொலிசாரும் கலகக் காறர்களுக்கு உதவுகிறார்கள்.வீதிகளெங்கும் தமிழர்கள் தேடிப் பிடித்துத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க வெலிக்கடைச் சிறையில் மற்றொரு கோரம் அரங்கேறுகிறது. அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 கைதிகள் அங்கிருந்த சிங்களக் கைதிகளாலும் சிறைக்காவலர்களாலும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படுகிறார்கள். உலகின் எங்கும் நிகழாத கோரம் இது. ஆனால் காவல் துறையோ அரசோ ஏனைய கைதிகளைக் காப்பாற்றவதற்கு எந்த நடவடிக்கையும் எடு;ககாத நிலையில் இரண்டு நாட்கள் கழித்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இத்தனை சம்பவங்களையும் கண்டும் காணாமல் இருந்த JR ஜெயவர்த்தனா ஐந்து நாட்கள் கழித்துத் தொலைக்காட்சியில் தோன்றுகிறார். நடந்த சம்பவங்களுக்காகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டிருப்பார் என்றோ அல்லது சிங்கள மக்களை அமைதி காக்குமாறு கேட்டிருப்பார் என்றோ நீங்கள் நினைத்தால் இன்னும் சிங்களத் தலைவர்களைச்; சரியாக எடை போடவில்லை என்றே அர்த்தப்படுத்த வேண்டும்.

துசு சொன்னது இதுதான்
“தனிநாடு கேட்ட தமிழர்களுக்குச் சிங்கள மக்கள் தக்க பாடம் புகட்டி விட்டனர். இனி எவராவது தனிநாடு என்ற பேச்செடுத்தாலே தொலைத்து விடுவோம். சொத்துக்களைப் பறிப்போம். தனிநாடு பற்றிப் பேசுவோர் சார்ந்துள்ள இயக்கங்கள் கட்சிகளைத் தடைசெய்வோம்.’’

தார்மீக சமுதாயத்தை உருவாக்குவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த, முழு நாட்டுக்குமே தன்னை அதிபர் என்று சொல்லிக் கொண்ட, பௌத்த தர்மத்தைப் பேணுவதாகச் சொல்லிக் கொண்ட ஒரு அரசுத் தலைவர் பேசிய பேச்சு இது கௌதம புத்தரின் வழிவந்தோர் என்று சொல்லிக் கொண்டவர்களின், ஒரு எறும்பைக் கூடக் கொல்ல மாட்டோம் என்று பேசித் திரிந்தவர்களின் சுய ரூபத்தை உலகமே அறிந்து கொள்கிறது.இலங்கையின் நிகழ்வுகளைக் கேள்விப்பட்ட தமிழ் நாடு கொதித்தெழத் தொடங்கி விட்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் தொடர்பு கொள்கிறார். மக்கள் வீதிகளி;ல இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இலங்கை நிலமை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் சினமடையச் செய்கிறது. அவர் ஜேஆருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அதன் பின்பே வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது.இதனைத் தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கிய இந்திரா காந்தி 83 கலவரம் ஓய்ந்து சில மாதங்களுக்குள்ளாகவே தனது சிறப்புத் தூதுவராக பு. பார்த்தசாரதியை கொழும்புக்கு அனுப்புகிறார். பார்த்தசாரதி இலங்கை அரசுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துகின்றார்.

இந்த நிலையில் ஈழப் பிரச்சினையின் போக்கையே தலைகீழாக மாற்றி விட்ட அந்தச் சோக சம்பவம் நடந்தேறுகிறது. 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப்பாதுகாவலன் ஒருவனாலே சுட்டு;க கொல்லப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அரசியல் அநுபவம் இல்லாத ராஜிவ் காந்தி பிரதமராகிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்திலும் சமரச முயற்சிகள் தொடர்வதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கியதும் துசு தனது அரசியல் சாணக்கியத்தை அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தியிடம் காட்டுகிறார்.ஈழப் பிரச்சினையைப் புரிந்து கொண்டு நியாயமாகச் செயற்பட்டு வந்த பார்த்தசாரதிக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கும்படி துசு கேட்க ராஜீவும் அதற்குச் சம்மதிக்கிறார்.பார்த்தசாரதிக்குப் பதிலாக பண்டாரியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.அதே காலப்பகுதியில் இலங்கைத் தூதுவராக திட்சித் நியமிக்கப்படுகிறார்.இந்த நிலையில் 1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகவும் அடிப்படையான நான்கு அம்சத் திட்டத்தை முன்வைக்கின்றன.

1. தமிழ் மக்கள் தனித் தேசிய இனம்
2. வட – கிழக்கு மாகாணங்கள் அவர்களின் தாயக பூமி
3. அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு
4. இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரும் குடியுரிமை, அடிப்படை உரிமைகளுக்கு உரித்துடையவர்கள்

என்பனவே இந்த அடிப்படை அம்சங்கள்.தமிழர் தரப்பின் இந்த நான்கு அடிப்படைக் கோரிக்கைகளில் முதல் மூன்றையுமே சிங்களத் தரப்பு எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட பேச்சு முடிவுக்கு வருகிறது.அரசியல் காய் நகர்த்தல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க யாழ்ப்பாணம் முழுவதையும் தமது கட்டு;பபாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட போராளிகள் ஒரு அங்கீகரிக்கப்படாத தனி இராச்சியத்தை நடத்த ஆரம்பிக்கின்றனர்.இநத நிலையில் வடமாராட்சியை இராணுவம் கைப்பற்றியது. அங்கிருந்த இளைஞர்களை தாறுமாறாகக் கொன்று குவித்தும் கைது செய்தும் பேயாட்டம் புரிந்தது.இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டத் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகினர். வடமாராட்சியைக் கைப்பற்றிய இராணுவம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்தது. அந்த முகாமை புதியதொரு ஆயுதத்தைக் கொண்டு தாக்குவதற்கான திட்டமது.நெஞ்சில் ஓர்மமும்; நாட்டுக்காக, மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக சிந்தையும் மட்டுமே இந்த ஆயுதத்தின் மூலதனங்கள். ஆம்! தம்மையே ஆயுதமாக்கும் கரும்புலிகள் சகாப்தத்தின் ஆரம்பம் அது1987ம் ஆண்டு யூலை மாதம் 5ம்திகதி வல்லிபுரம் வசந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் மில்லர் முதற் கரும்புலியாகி நெல்லியடி மகா வித்தியாலய முகாமை வெடிமருந்துகள் நிரப்பிய தனது வாகனத்தின் மூலம் துவம்சம் செய்கிறான். தனியொருவனாக நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்று சிங்கள இராணுவத்தின் உள உறுதியையே தகர்த்து வீரகாவியமாகிறான். வெற்றிக் களிப்பில் மிதந்த துசு அரசுக்கு விழுந்த பெருத்த அடி அது. இதனிடையே வடமாராட்சியில் சிங்கள இராணுவத்தின் அட்டகாசங்கள் இந்திய அரசிற்கும் எரிச்சலைக் கொடுக்க அவர்கள் சிங்கள அரசிற்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்தியாவினால் தான் அடக்கப்பட்டு விடுவோமோ என்ற சந்தேகம் கலந்த அச்சம் JR இற்குத் தோன்ற அவர் தனது அரசியல் குள்ளநரித்தனத்தைப் பாவிக்கத் தொடங்கினார். அரசியல் அநுபவமில்லாத பெரிய நாட்டின் தலைவரை அரசியல் குள்ளநரியான சிறிய நாட்டின் தலைவர் ஜே. ஆர் தன் வலைக்குள் சிக்க வைத்தார்.தமிழர்களுக்காக, தமிழர்களின் அடிமைத்தளையை நீக்குவதற்காக, தமிழ் மண்ணை மீட்பதற்காக, தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப் புலிகளின் ஆலோசனை கேட்கப்படாமலே இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இதனிடையே யாழ்ப்பாணம் சென்று தேசியத் தலைவரைச் சந்தித்த அதிகாரிகளிடம் பல சந்தேகங்களை தேசியத் தலைவர் கேட்டார். இது குறித்து டெல்லி வந்து ராஜீவ் காந்தியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரை டெல்லிக்கு அழைத்தார்கள்டெல்லியில் வைத்து ஒப்பந்த நகல்கள் வழங்கப்பட்டபோது அவற்றில் ஏற்றுக் கொள்ள முடியாத பல விடயங்கள் இருப்பது குறித்து தலைவர் விசனம் தெரிவிக்க அவற்றிற்கு மழுப்பலான பதில்கள் தரப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள புலிகள் வற்புறுத்தப்பட்டனர்.

இதனை சில தினங்களின் பின் சுதுமலையில் நடந்த மாபெரும் கூட்டத்தில் தலைவர் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்;.1987 ஜுலை 29 இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் எத்தனையோ குறைகள்இ குற்றங்கள்இ முரண்பாடுகள் இருந்தன. இவ் ஒப்பந்தத்தில்இ தமிழர் தரப்பை நசுக்கிய சிங்கள அரசும் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புமே கைச்சாத்திட்டிருக்க வேண்டும். மத்தியஸ்தம் வகித்த இந்தியா சாட்சிக் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் சாட்சிக் கையெழுத்துக்குப் பதிலாக தமிழர் தரப்பிற்காக இந்தியா கையெழுத்திட்டது விந்தையானது.இந்திய மத்திய அரசின் வாக்குறுதிகளை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கவும் புலிகள் ஆரம்பித்திருந்தனர். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களையும் பற்றி சிங்கள அரசு அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக தென் தமிழீழத்தில் அசுர வேகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தது.விடுதலைப் புலிகள் கொதித்தனர். தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குத் சரியான வழியை யோசித்தவர்களுக்கு அஹிம்சையைப் போதித்த இந்தியாவிற்கு அஹிம்சை மார்க்கமே சரியெனத் தோன்றியிருக்க வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கமைய தமிழீழத்தில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும்.புனர்வாழ்வு என்ற போர்வையில் நடத்தப்படும் சிங்கள்க் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார்.1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி நல்லூர் கந்தசுவாமி கோயி;ல் முன்றலில் திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பமானது. அகிம்சையைப் போதித்த இந்தியா திலீபனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நல்ல பதிலைத் தரும் என்றே தமிழர்களில் பலர் நம்பினர். ஆனால் இந்தியா மௌனமாகவே இருந்ததுஒட்டு மொத்தத் தமிழினத்தையே கதறி அழ வைத்த அந்தத் துயரம் 26ம் திகதி நடந்தது. ஆம்! மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று ஆசைப்பட்ட அந்தத் தியாகி நல்லூர் மண்ணிலே இந்தியாவின் அஹிம்சை முகத்திரையைக் கிழித்து மூச்சிழந்து போனான். இந்தியா விடிவைப் பெற்றுத் தரும் என்று நம்பிய சாதாரண தமிழ் மக்களுக்குக் கூட இந்தியாவின் கபட நாடகம் புரியத் தொடங்கியது. இந்தியாவின் மீதான நம்பிக்கையை தமிழீழ மக்கள் முற்றாக இழக்க வைத்த சம்பவம் இது.

இந்த நிலையில் சிங்கள அரசின் பிடிவாதத்தனத்திற்கும் இந்திய அரசின் கையாலாகாத்தனத்திற்கும் சாட்சியாக அமைந்த, தமிழ் மக்களை இந்திய அரசின் மேல் ஆத்திரப்பட வைத்த, தங்களது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய வீரத் தளபதிகளை அநியாயமாகப் பறிகொடுத்த, பலிகொடுத்த அந்தச் சோக சம்பவம் நடந்தேறியது.ஒப்பந்த விதிகளுக்கமைவாக கடலில் பயணம் செய்து கொண்டிருந்த புலிகளின் முன்னணித் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 புலி வீரர்களை இராணுவம் கைது செய்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து சண்டை செய்யாமலே அவர்கள் சரணடைகிறார்கள். புலித் தளபதிகள் கைது செய்யப்பட்ட செய்தியறிந்த சிங்கள அரசு அரசியல் கணக்;குப் போட ஆரம்பித்து விட்டது.இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டதால் கொதிப்படைந்திருந்த சிங்கள மக்களிடம் தனது திறமையைக் காட்ட JR திட்டமிட்டார். கைது செய்யப்பட்ட தளபதிகளை கொழும்புக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். எக்காரணம் கொண்டும் கைது செய்யப்பட்டவர்களைக் கொழும்பிற்குக் கொண்டு போகக் கூடாது என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர். அதை இந்தியத் தரப்பிடம் உறுதியாகக் கூறவும் செய்தனர். ஆனால் இந்திய அரசினால் அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அல்லது தடுத்து நிறுத்த விரும்பவில்லை.இந்த நிலையில் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ம் திகதி கொழும்பிற்குக் கொண்டு செல்லப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட இருந்த வேளை 17 வேங்கைகளும் சைனைட்டை அருந்துகிறார்கள். அவர்களில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வீரர்கள் வீரமரணம் அடைகின்றனர். போர்க்களங்களில் சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரத் தளபதிகளை கபடமாகக் கொன்று சிங்களம் எக்காளமிட்டது. இந்திய கைகட்டி மௌனியாகி நின்றது.அத்துடன் இந்திய அரசின் மீதான நம்பிக்கை முற்றாகத் தகர்ந்து போக இந்திய இராணுவத்துடனான மோதல் ஆரம்பமாகிறது.சுக்கானைப் பிடித்தபடி இந்தச் சுக்கான் எரிந்து முடிவதற்குள் எமது இராணுவம் உங்களை முடித்து விடும் என்று எள்ளி நகையாடிய திக்சித்திற்கும் இந்தியாவிற்கும் தாம் போட்டது தப்புக் கணக்கு என்று புரிந்தது.புலிகளின் வீரத்தின் முன் பல இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த இந்திய இராணுவம் பொது மக்கள் மீது கடுந் தாக்குதலைத் தொடுத்தது. யாழ்ப்பாண் வைத்தியசாலைக்குள்ளும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி பலரைக் கொன்று குவித்தது.சிங்கள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் செய்த அட்டூழியங்களுக்கு இணையான அல்லது அதை விட ஒருபடி மேலான அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டது. தேசியத் தலைவரையும் ஏனைய புலிகள் இயக்க முக்கியஸ்தர்களையும் கொன்று விடுவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்ட இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு கிடைத்ததெல்லாம் தோல்வியே.

இந்நிலையில் புலிகளுக்கும் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்றது. இந்திய இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. எதையுமே சாதிக்காதஇ இழப்புக்களை மட்டுமே சந்தித்து ஒட்டு மொத்தத் தமிழினத்தின் வெறுப்பையும் சம்பாதித்த கூட்டமாக இந்திய இராணுவம் வெளியேறியது.வழமையான சிங்களத் தலைவர்கள் போலவே பிரேமதாசாவும் தமிழர் தரப்பை ஏமாற்ற முயற்சிக்கிறார். போர் நிறுத்தம் முடிந்து மீண்டும் போர் ஆரம்பமாகிறது.

1990ம் ஆண்டு யூலை மாதம் பத்தாம் நாள் முதல் முறையாக கடற் கரும்புலித்தாக்குதல் நடத்தப்படுகிறது. பருத்தித்துறைக் கடலில் நின்ற சிங்களத்தின் கட்டளைக் கப்பலைத் தகர்த்து மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன்இ கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரகாவியம் படைக்கின்றனர். கடலும் சிங்களத்திற்குச் சிம்மசொப்பனமாகிறது.பல முனைகளிலும் அடி வாங்கினாலும் இழப்புக்களைச் சந்தித்தாலும் தமிழரை போரியல் ரீதியாக வென்று விட வேண்டும் என்ற எண்ணம் எல்லாச் சிங்களத் தலைவர்களிடமும் ஆழப் பதிந்தே இருந்து வந்திருக்கிறது. அதற்குப் பிரேமதாசாவும் விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்ய இராணுவத்தை ஏவி விட்ட பிரேமதாசாவும் 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி மேதின ஊர்வலத்தில் வைத்துக் கொல்லப்படுகிறார்.முன்னர் போலன்றி தமிழர் தலைமை சரியான பார்வையுடன் சிங்கள அரசியலையும் அரசியல் தலைவர்களையும் பார்க்கத் தொடங்கியிருந்தாலும் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் சமாதானத்தை உருவாக்கக் கூடிய தலைவராக இவர் இருப்பாரோ என்று நம்பிக்கை கொள்ள வைப்பவர்களும் சிங்கள அரசியலில் தோன்றிக் கொண்டு தான் இருந்தார்கள்.அந்த வகையில் தனிச் சிங்களச் சட்டத்தை ஆரம்பித்து வைத்த பண்டாரநாயக்காவினதும் தரப்படுத்தலை அமுல் செய்த சிறிமா பண்டாரநாயக்காவினதும் வாரிசான சந்திரிக்கா குமாரணதுங்கவும் சமாதானப் புறா வேடம் தாங்கி அரசியலில் நுழைந்தார். ஆனால் சொற்ப காலத்திற்குள்ளாகவே சமாதானத்திற்கான யுத்தத்தை ஆரம்பித்து யுத்தத்தை கொண்டு நடத்தும் பொறுப்பை மாமனாரான அநுருத்த ரத்வத்தையிடம் கொடுத்தார். இவரது காலப்பகுதியில் தான் வரலாற்றில் பதியப்பட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது.

1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண மக்கள் அனைவருமே குடிபெயர வேண்டி ஏற்பட்டது.யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் பலம் அழிந்து விட்டது என்று சிங்களம் கணக்குப் போட்டது. சர்வதேசமும் இதை நம்பியது. ஆனால் எல்லாக் கணக்குகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக பெரும் பாதுகாப்புடன் அமைந்திருந்த பாரிய முல்லைத்தீவு இராணுவ முகாமைத் தாக்கியழித்ததுடன் முழு முல்லைத் தீவு மாவட்டத்தையும் புலிகள் மீட்டெடுத்தனர். ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு படையினரைத் தமிழர் தாயகத்தை விட்டு ஓட்டமெடுக்க வைத்தனர்.இப்படியாக அடிமேல் அடி பட்ட போதும் சிங்களத்தின் போர் வெறி அடங்கவில்லை. சந்திரிக்காவிற்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பிடித்த காலத்தில் மற்றுமொரு முறை யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. இம்முறை நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு முன்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஐக்கிய தேசியககட்சி அரசாங்கம் சந்திரிக்காவினால் கலைக்கப்பட்டது. இது பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் சர்வதேசம் மௌனமாகவே இருந்து விட்டது.

சந்திரிக்காவைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய மஹிந்த ராஜபக்சவும் அதே யுத்த வெறியை மக்களுக்கு ஊட்டி யுத்தத்தால் தமிழரை அழித்து விடலாம்இ அடக்கி விடலாம் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். நீதியும் நியாயமும் நிலைத்து நிற்பது உண்மையெனில் தர்மமும் சத்தியமும் நிலையானது என்பது யதார்த்தமெனில் வரலாறு மீண்டுமொரு பாடத்தை ஆட்சியாளர்களுககுக் கற்றுக் கொடுக்கும் என்று நம்புவோம்.

(உசாத்துணை நூல்கள் :
ஈழவரலாறு - கார்மேகம் )
விடுதலை - தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்

பாரே பார்

பாரே உந்தன் இதயம் உள்ள
பக்கம் கையை வைத்துப் பார்
வீட்டை விதியை எண்ணித் தினமும்
விழிகள் கலங்கும் எம்மைப் பார்

தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத்
தலையினில் கட்டியே விட்டவர் நீர்
உரிமை இழந்த இனமாய் நாங்கள்
உலகம் முழுதும் உழல்வதைப் பார்

மழையில் பனியில் மாக்களைப் போல
மருளும் தமிழர் நிலையைப் பார்
மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம்
மஹிந்த செயலை அடக்கப் பார்

ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை
அராஜகர் பறித்த கொடுமையைப் பார்
அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி
அலைபவர் துயரைக் களையப் பார்

காமுகர் வெறியால் ஆவியை இழந்து
கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார்
கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக்
கருவியை எடுத்த காரணம் பார்

பால்மணம் மாறாப் பாலகன் கூடப்
புலியாய் மாறிய புதினம் பார்
பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்
பகுத்து அறிந்து பதில்தரப் பார்

சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ
சீறியே நிற்கும் படித்தவர் நீர்
சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ
சிந்தித் தெமக்கு விளக்கப் பார்

ஒட்டுப் படையுடன் ஒட்டும் அரசை
ஒட்ட நறுக்க முயன்றே பார்
சட்டம் ஒழுங்கை காக்க மறுத்த
மட்ட அரசை முடக்கப் பார்

மனிதம் என்றே பேசும் உங்கள்
மனதைக் கொஞ்சம் கேட்டே பார்
நீதி நியாயம் எல்லாம் இங்கே
நிலையாய் அழிந்து போனதைப் பார்

வணக்கம்

வணக்கம் என் தமிழ் சகோதரர்களே!

புதிய குடிலினூடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.

நானறிந்த `பூராயங்'களையும், படைப்பு என்ற பெயரில் நான் எழுதி என் மனைவீயால் கிழிக்கப்பட்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழால் இணையும் நண்பர்கள் இந்தக் குடிலினுடாக நண்பர்களாவீரகள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
மணிவாசகன்